www.garudabazaar.com

சிறந்த நடிகன்னு அப்பவே சொன்னேன்.. சூரி பத்தி சரியா கணிச்ச விஜய் சேதுபதி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாகவும் உருவாகி வருகிறது.

Vijay Sethupathi prediction about Soori before years

Images are subject to © copyright to their respective owners

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

விடுதலை படத்தின் நிகழ்ச்சி

விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள சூழலில், முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்திருந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் விஜய் சேதுபதி, சூரி என ஒட்டுமொத்த படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Vijay Sethupathi prediction about Soori before years

Images are subject to © copyright to their respective owners

விடுதலை ட்ரைலர் வெளியான பிறகு, நடிகர் சூரிக்கு அனைத்து இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைக்கும் சூரி, விடுதலை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த கேரக்டரில் தோன்றுவது ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது.

இதனால், சிறந்த கதையமைப்பு கொண்ட திரைப்படங்களில், காமெடி என இல்லாமல் விடுதலை படத்தை போன்று அசத்தலான கதைக்களங்கள் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் சூரி தோன்றுவார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சூரி பற்றி முன்பே கணித்த விஜய் சேதுபதி

இந்த நிலையில், நடிகர் சூரி குறித்து முன்பே நடிகர் விஜய் சேதுபதி கணித்துள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Behindwoods சேனலுக்கு முன்பு ஒரு முறை நடிகர் விஜய் சேதுபதி அளித்திருந்த பிரத்யேக பேட்டியில், "சூரி என் நண்பன். வெண்ணிலா கபடி குழுவில் இருந்து எனக்கு அவன் பழக்கம். அவன் படத்துல நான் இருக்கிறது பெரிய சந்தோஷம். பிரமாதமா நடிச்சிருக்கான், நான் ஃபர்ஸ்ட் ஹாஃப் பார்த்துட்டேன். வெற்றி சார் காணிச்சாப்ல. அவன்கிட்ட ஒரு இன்னசென்ட் இருக்கு. ஒரு சிறந்த நடிகன் அவன். ரொம்ப வருஷமா சொல்லிட்டே இருந்தேன் மாமா, இப்படியே இருந்துடாத வேற வேற கேரக்டர் பண்ணுடா நீ. பெரிய டைரக்டர்ஸை போய் பாருடா. ஹீரோ ஆக்குறேனு சொல்ற மக்கு பசங்கள நம்பாம பெரிய டைரக்டர்ஸ போய் பாரு" என சூரியை பற்றி பேசி இருந்தார்.

Vijay Sethupathi prediction about Soori before years

சிறந்த நடிகன் சூரி..

அதே போல, விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசி இருந்த சூரி, நடிகர் விஜய் சேதுபதி தன்னை பாராட்டியது குறித்தும், வெண்ணிலா கபடிக் குழு படத்தின் போது காமெடியன் என முடிவு செய்யாமல் சிறந்த நடிகன் என பாராட்டியதாகவும், எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என தன்னை முன்பே அறிவுறுத்தியது பற்றியும் சூரி குறிப்பிட்டுள்ளார்.

Vijay Sethupathi prediction about Soori before years

சிறந்த நடிகன்னு அப்பவே சொன்னேன்.. சூரி பத்தி சரியா கணிச்ச விஜய் சேதுபதி!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi prediction about Soori before years

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.