www.garudabazaar.com

"காட்டுப்பசி".. சிம்புவுடன் இணையும் புதிய படம் குறித்து ட்வீட் செய்த பிரபல இளம் இயக்குனர்! Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் புதிய படம் குறித்து அதன் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பதிவிட்டுள்ளார். 

Desingh Periyasami tweet about film with Silambarasan TR str48

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விடுதலை -ல் விஜய் சேதுபதி ROLE-ல நடிக்கவிருந்த பாரதிராஜா.. என்ன ஆச்சு? - வெற்றிமாறன்!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Desingh Periyasami tweet about film with Silambarasan TR str48

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Desingh Periyasami tweet about film with Silambarasan TR str48

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த அறிவிப்பை சிலம்பரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து நடிகர் & தயாரிப்பாளர் கமல்ஹாசன், "சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, "காட்டுப்பசிக்கு விருந்து" என ட்வீட் செய்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தொடர்ந்து 3 வருடங்கள் கழித்து தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார்.

Also Read | கமல் தயாரிப்பில் சிம்பு.. வெளியான புதிய படத்தின் அசத்தல் அறிவிப்பு! இயக்குனர் இவரா? செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

Desingh Periyasami tweet about film with Silambarasan TR str48

People looking for online information on Desingh Periyasami, Desingh Periyasami tweet, Silambarasan TR, STR 48 will find this news story useful.