www.garudabazaar.com

தனுஷ் நடிப்பில் 'சூதாடி'.. "அந்த படம் நின்று போக இதுதான் காரணம்!" மனம் திறந்த வெற்றிமாறன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன்,  நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றில் சூதாடி படம் குறித்து பேசியுள்ளார்.

Vetrimaran about His Dropped film with dhanush soodhadi

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள் (ஒரு பகுதி)' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

Vetrimaran about His Dropped film with dhanush soodhadi

Image Credit - Viduthalai Trailer 

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ  சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை வெற்றிமாறன் அளித்துள்ளார். அதில், தனுஷ் நடிப்பில் பாதியில் நின்று போன சூதாடி படம் குறித்து பேசியுள்ளார். "சூதாடி படம் 5 நாள் ஷூட்டிங் செய்தோம். எனக்கு சரியா இல்லைனு தோனுது. ஆடுகளம் படத்தில் இருந்து காட்சியமைப்பு திரும்பவும் இந்த படத்தில் வருவது போல உள்ளது. படத்தின் உள்ளடக்கமும் அது போல உள்ளது. நீங்கள் ராஞ்சனா படம் பண்ணிட்டு வாங்க. அதுக்குள்ள நான் சின்ன படம் ஒன்னு முடிச்சிடுறேன்." என சூதாடி படம் குறித்து வெற்றிமாறன் பேசினார்.

தனுஷ் நடிப்பில் 'சூதாடி'.. "அந்த படம் நின்று போக இதுதான் காரணம்!" மனம் திறந்த வெற்றிமாறன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaran about His Dropped film with dhanush soodhadi

People looking for online information on Dhanush, Vetrimaran will find this news story useful.