www.garudabazaar.com

'பாவ கதைகள்' பார்த்த தளபதி விஜய்... போனில் சாந்தனுவிடம் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து "பாவ கதைகள்" என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம்  Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். மொத்தமாக பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகியவற்றால் ஏற்படும் தீவினைகள் குறித்து விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இருக்கின்றன.

vijay review on paava kadhaigal thangam Shanthanu பாவ கதைகள்' பார்த்த தளபதி

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தங்கம்' பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய இந்த படம் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வண்ணம் இருந்தது என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் முக்கியமாக சாந்தனுவின் சிறப்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.  சமீபத்தில் தங்கம் குழுவினருடன் லைவில் வந்தது சாந்தனு கூறும்போது தளபதி விஜய் இந்த படத்தை பார்த்துவிட்டு தனக்கு போன் செய்ததை பற்றி கூறியுள்ளார். அவர் கூறும் பொழுது "இது தான் புது சாந்தனுவா..என்னயா இந்த மாதிரி நடிச்சிருக்கு... நீ இப்படியெல்லாம் கூட நடிப்பியா..?" என்று கூறியுள்ளார்.

vijay review on paava kadhaigal thangam Shanthanu பாவ கதைகள்' பார்த்த தளபதி

People looking for online information on Paava Kadhaigal will find this news story useful.