Rocketry
www.garudabazaar.com

துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் நடிக்கும் "சீதா ராமம்".. வெளியான அடுத்த சிங்கிள் டூயட் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்  வெளியாகி உள்ளது.

Kurumugil Lyrical Video Song Sita Ramam Dulquer Mrunal

Also Read | மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்'.. இதான் விக்ரம் கேரக்டர் பெயர்.. மிரட்டலான போஸ்டர்!

இயக்குனர் ஹனு ராகவபுடி 1965 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர் பின்னணியில் இந்த காதல் கதையை உருவாக்கி வருகிறார். சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர்.

ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ரசிகர்களை  கவர்ந்தது. விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்பாடல் ஹிட் ஆகியுள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ளது. 'குறு முகில்' எனும் இந்த டூயட் பாடலை சாய் விக்னேஷ் பாடியுள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி ரிலீசாகி உள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்றியுள்ளனர்.

Also Read | "டைரக்டரா முதல் படத்துலயே.." - 'ராக்கெட்ரி' மாதவனை பாராட்டி ரஜினி பரபரப்பு கடிதம்..!

துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் நடிக்கும் "சீதா ராமம்".. வெளியான அடுத்த சிங்கிள் டூயட் பாடல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kurumugil Lyrical Video Song Sita Ramam Dulquer Mrunal

People looking for online information on Dulquer, Kurumugil Lyrical Video Song, Mrunal, Sita Ramam Movie will find this news story useful.