www.garudabazaar.com

நடிகர் விஜய் வீட்டுக்கு விரைந்த மாவட்ட செயலாளர்கள்.. உடனடியாக நடந்து வரும் முக்கிய ஆலோசனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். 

நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை | Actor vijay meeting with makkal iyakkam district secretary

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. இதை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை | Actor vijay meeting with makkal iyakkam district secretary

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதில் விஜய்க்கு எந்த தொடர்பும் இல்லை என்பதும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. 

நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை | Actor vijay meeting with makkal iyakkam district secretary

இந்நிலையில் தற்போது விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். பனையூரில் அமைந்துள்ள விஜய்யின் இல்லத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை | Actor vijay meeting with makkal iyakkam district secretary

People looking for online information on SA Chandrasekar, Vijay, Vijay Makkal Iyakkam, Vijay Politics will find this news story useful.