RRR Others USA
www.garudabazaar.com

"பல தடவ சொல்லிட்டோம்.. இதுக்கு அப்புறமும்.." ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ரசிகர்களுக்கு முக்கிய எச்சரிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

Vijay makkal iyakkam bussy anand warning to fans

மாஸ்டர் படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

நெல்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் வெளியான பாடல்கள், ஏற்கனவே சர்வதேச அளவில் வைரல் ஹிட்டடித்திருந்தது. தொடர்ந்து, பீஸ்ட் டிரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க, ரிலீஸ் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.

தளபதி 66 பூஜை

இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்திற்கான பூஜையும் நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியின் இயக்கத்தில், விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

விஜய்க்கு இது புது கூட்டணி

இன்னும் பெயரிடப்படாத இந்த 'தளபதி 66' படத்தில், முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். அதே போல, இசையமைப்பாளர் தமனும் விஜய் படத்திற்கு முதல் முறையாக இசை அமைக்கவுள்ளார். இன்னொரு பக்கம், விஜய்யின் இந்த படத்தில், நடிகர் சரத்குமார் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும், நேற்று நடைபெற்றிருந்த படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள், அதிக அளவில் வைரலாகி இருந்தது.

ஒட்டுமொத்தமாக விஜய்க்கு இது ஒரு புது கூட்டணி என்பதால், படம் எப்படி இருக்கும் என்ற ஆவலும் தற்போதே ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. இதனிடையே, விஜய் ரசிகர்களுக்கு வேண்டி எச்சரிக்கை தொடர்பான அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் எச்சரிக்கை

இது தொடர்பான பதிவை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். "அரசுப்பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவு படுத்தும் வகையில் பத்திரிக்கை, இணைய தளங்களில் போஸ்டர்களின் என எந்தத்தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

இது நம்முடைய தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதனை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இயக்கத்தை விட்டும் நீக்கியுள்ளோம்.

இருப்பினும் நம் தளபதி அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்" என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay makkal iyakkam bussy anand warning to fans

People looking for online information on Bussy anand, Thalapathy 66, Vijay, Vijay fans, Vijay Makkal Iyakkam will find this news story useful.