Video: "உன் அப்பா பேர் என்ன?".. 'மகளிடம் ரிவீல் செய்யும் கண்ணம்மா!'.. சம்பவம் இருக்கு!
முகப்பு > சினிமா செய்திகள்ரோஷினி மற்றும் அருண் இருவரும் நடித்து வரும் இந்த சீரியலின் பரபரப்பான கட்டம் தற்போது ஒளிபரப்பாகிறது. அதன்படி கண்ணம்மாவிடம் லட்சுமி என்கிற குழந்தையும் பாரதியிடம் ஹேமா என்கிற குழந்தையும் வளர்ந்து வருகிறார்கள்.

ஆனால் கண்ணம்மாவுக்கு தன்னுடன் பழகி வரும் ஹேமா, பாரதிக்கும் தனக்கும் பிறந்த குழந்தை என்பது தெரியாது. இதேபோல் லட்சுமியுடன் ஒரு நண்பன் போல பழகி வரும் பாரதிக்கு லட்சுமி தனக்கும் கண்ணம்மாவுக்கும் பிறந்து கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் குழந்தை என்பது தெரியாது. ஆனால் பாரதி கண்ணம்மா இருவரைத் தவிர இந்த விஷயங்கள் அனைவருக்குமே தெரியும். இந்த சூழ்நிலையில் இரண்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கப் போகிறார்கள். குறிப்பாக கண்ணமாவிடம் வளர்ந்து வரும் லட்சுமிக்கு படிக்க வசதியில்லாததால் கண்ணம்மா அவளுக்கு ஸ்காலர்ஷிப் விண்ணப்பம் எழுதிப் போட, அந்த ஸ்காலர்ஷிப்பை கொடுத்து தற்போது பாரதிதான் தனக்கே தெரியாமல் தன் மகளை படிக்க வைக்கப் போகிறார்.
இதனைத் தொடர்ந்து பாரதி, வெண்பா இருவரும் லட்சுமி பாப்பாவிடம் உன்னுடைய அப்பா பெயர்? என்ன என்று ஸ்காலர்ஷிப் தொடர்பான அப்ளிகேஷன் பணிகளுக்காக கேட்கிறார்கள். லட்சுமிக்கு தன் அப்பா பெயர் என்னவென்று தெரியவில்லை. உடனே உன் அம்மாவுக்கு போன் போட்டு கேட்டுச் சொல் என்று பாரதி சொல்ல லட்சுமியும் கண்ணம்மாவுக்கு போன் போட்டு கேட்கிறாள்.
— Vijay Television (@vijaytelevision) April 7, 2021
இதை மறைந்திருந்து பார்த்தபடி கண்ணம்மா இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டியதுதான். இப்போது பொய் சொன்னால் பாரதியை ஏமாற்றி லட்சுமியை படிக்க வைப்பது போல் ஆகிவிடும். நான் எதுக்கு பொய் சொல்லணும். அவ அப்பாபெயரை ஏன் மாத்தி சொல்லணும். உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான் ஆக வேண்டியது ஆகட்டும் என்பது போல் லட்சுமி குழந்தையிடம் உன் அப்பா பெயர் பாரதி என்று சொல்லிவிடுகிறார் கண்ணம்மா. இதை பாப்பா சொல்ல, பாரதி கேட்டு ஷாக் ஆகிறார். இந்த ப்ரோமோ தான் இப்போது விஜய் டிவியில் வெளியாகி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை பரபரப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. இந்த எபிசோடு இன்று ஏப்ரல் 8-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது.