Reliable Software
www.garudabazaar.com

'மறைந்த' விஜய் டிவி சீரியல் நடிகரின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? வெளியான தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த மார்ச் 22 -ஆம் தேதி தமிழ் சினிமாவில் இரண்டு திரை நட்சத்திரங்கள் மறைவடைந்ததை அடுத்து தமிழ் சினிமா சோகத்தில் ஆழ்ந்தது.

late actor Venkat Eeramana Rojave Vijay Tv character replaced

அதில் ஒன்று தென்மேற்கு பருவக்காற்று, ரேனிகுண்டா படங்களில் நடித்த தீப்பெட்டி கணேசனின் மறைவு. இன்னொன்று பிரபல விஜய் டிவி சீரியல்களான பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகர் வெங்கட்டின் மறைவு.

நடிகர் வெங்கட் சூது கவ்வும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.  இவருடைய மறைவினை அடுத்து விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவந்தனர். இதனிடையே இவர் நடித்து வந்த ஈரமான ரோஜாவே சீரியலில் வெங்கட் நாட்டரசன் என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலம்.

late actor Venkat Eeramana Rojave Vijay Tv character replaced

இந்நிலையில் அந்த சீரியலின் நாட்டரசன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட்டுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்கவிருப்பதாக, அவருடைய புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

late actor Venkat Eeramana Rojave Vijay Tv character replaced

People looking for online information on Actor, Eeramanarojave, Nattarasan, Venkat, Vijaytvfamily will find this news story useful.