டி.ஆர். கொந்தளிப்பு ’ஒருத்தன் காதலிய கூட்டிட்டு தியேட்டருக்கு…’ - வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 03, 2020 04:58 PM
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தரின் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர் தமிழக தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பது பற்றி தன் கருத்தை தெரிவித்தார்.

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிக்கு மேல் 8% கேளிக்கை வரி விதிக்கப்பட்டிருப்பது இக்கட்டு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இந்த வரியை நீக்க விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகளோடு இணைந்து தமிழக முதல்வரிடம் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலுக் டிக்கெட்டில் விலை அதிகமாக இருப்பதால் அதிக மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை என்ற கருத்தை முன்வைத்தார். திரையரங்கிற்குள் விற்கப்படும் உணவுகளின் விலையும் வெகுஜனத்தை மிகவும் பாதிப்பதாக தெரிவித்த அவர் முன்பு திருவிழா போல இருந்த திரையரங்குகளில் தற்போது மிகச்சிலரே படம் பார்க்க வருவதாக தெரிவித்தார்.
டி.ஆர். கொந்தளிப்பு ’ஒருத்தன் காதலிய கூட்டிட்டு தியேட்டருக்கு…’ - வீடியோ இதோ வீடியோ