விக்னேஷ் சிவன் வெளியிட்ட நயன்தாராவின் புதிய லுக்.! க்ளாசிக் ஸ்டைலில் லேடி சூப்பர்ஸ்டார்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை நயன்தாராவின் வேற லெவல் க்ளாஸ் லுக்கை விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என புகழப்படுபவர் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித் என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கியுள்ளனர். வரும் மே மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சூரிய வெளிச்சத்துக்கும் முன் தேவதை போல நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டாரின் ஸ்டில்லுக்கு லைக்ஸை வாரி வழங்கி வருகின்றனர்.