"என் கண்மணியோடு கடவுளுக்கு நன்றி சொல்ல."… நயன்தாராவுடன் விக்கி எங்க போய்ருக்காரு பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் நயன்தாராவோடு இருக்கும் புகைப்படத்தை பகிர அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vignesh shivan went shiridi with nayanthara went viral

லேடி சூப்பர் ஸ்டார்…

ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கிய நயன்தாரா அடுத்த சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, வல்லவன் மற்றும் கஜினி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவருக்கு ரி எண்ட்ரி படமாக ராஜாராணி படம் அமைந்தது. அதன் பின்னர் வரிசையாக ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Vignesh shivan went shiridi with nayanthara went viral

மலர்ந்த காதல்…

போடா போடி திரைப்படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இருவரும் காதலர்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மூலமாக ராக்கி படத்தை வெளியிட்டுள்ளனர். அதுபோலவே கூழாங்கல் என்ற சர்வதேச விருதுகளைக் குவிக்கும் படத்தையும் வெளியிட உள்ளனர்.

Vignesh shivan went shiridi with nayanthara went viral

ஆன்மீக சுற்றுலா…

இந்நிலையில் இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் நயன்தாராவுடன் ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அது சம்மந்தமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் ”என் கண்மணியோடு ஷூர்டியில் இருந்து. அழகான தருணங்களை தந்த சாய்பாபாவை வழிபடுவதற்காக… மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளாக்பஸ்டர்… ஆசீர்வதிக்கப்படுதல்… நன்றி நவில்தல்” என அதில் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக இருவரும் இணைந்து அதிகளவில் ஆன்மீக தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh shivan went shiridi with nayanthara went viral

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

"என் கண்மணியோடு கடவுளுக்கு நன்றி சொல்ல."… நயன்தாராவுடன் விக்கி எங்க போய்ருக்காரு பாருங்க.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan went shiridi with nayanthara went viral

People looking for online information on KRK, Nayanthara, Vignesh shivan will find this news story useful.