Pisasu 2
www.garudabazaar.com

”நாம promise பண்ண மாதிரி…” நயன்தாராவுக்காக உருகிய விக்னேஷ் சிவன்… viral video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடித்து வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.

Vignesh shivan nayanthara recent viral video

Also Read | FAMILY MAN இயக்குனர்களோடு இணைந்த விஜய் சேதுபதி… Title உடன் வெளியான புதிய போஸ்டர் !

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா…

ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கிய நயன்தாரா அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையானார். அதன் பின்னர் பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, வல்லவன் மற்றும் கஜினி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவருக்கு ரி எண்ட்ரி படமாக ராஜாராணி படம் அமைந்தது. அதன் பின்னர் வரிசையாக ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது.

Vignesh shivan nayanthara recent viral video

விக்னேஷ் சிவன்…

போடா போடி திரைப்படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இருவரும் காதலர்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மூலமாக ராக்கி படத்தை வெளியிட்டுள்ளனர். அதுபோலவே கூழாங்கல் என்ற சர்வதேச விருதுகளைக் குவிக்கும் படத்தையும் வெளியிட உள்ளனர்.

Vignesh shivan nayanthara recent viral video

காத்து வாக்குல ரெண்டு காதல்…

இந்நிலையில் நானும் ரௌடிதான் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாரா கூட்டணி மீண்டும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். நேற்று இந்த படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து நயன்தாரா குறித்தும் கண்மணி கதாபாத்திரம் குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

Vignesh shivan nayanthara recent viral video

Promise செய்தபடி…

அந்த பதிவில் “அன்புள்ள தங்கமே… இப்போது கண்மணி… என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி! நீ எனக்கு தட்டுக் கொடுப்பது.... ! ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் சோர்ந்து போகும்போது எவ்வளவு துணையாக இருந்தாய்.. இவை அனைத்தும் என்னையும் இந்த படத்தையும் முழுமைப்படுத்துகிறது! நீதான் இந்தப் படம் .. நீதான் எனக்கு இந்த வெற்றி !!! என் கண்மணி இன்று நீ திரையில் ஜொலிப்பதைப் பார்ப்பது .. மீண்டும் உங்களை இயக்கி உங்களிடமிருந்து சிறந்ததை வெளிக் கொண்டுவந்தது! ஒரு இயக்குனராக எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் திட்டமிட்டபடி ஒரு நல்ல படத்தை தயாரித்து, காதம்பரிக்கு இணையான நல்ல கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம். நீயும் கண்மணி பாத்திரத்தில் நடித்ததில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என உருக்கமாக பதிவு செய்து, இருவரும் நடந்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

”நாம PROMISE பண்ண மாதிரி…” நயன்தாராவுக்காக உருகிய விக்னேஷ் சிவன்… VIRAL VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan nayanthara recent viral video

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh shivan nayanthara recent Video will find this news story useful.