www.garudabazaar.com

"நயன்தாராவுடனான சீக்ரெட் ஃபோட்டோ!".. ரசிகருக்காக இன்ஸ்டாவில் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பல ரசிகர்களைப் பெற்றிருக்கிறார்.

vignesh shivan shares secret pic of him and nayanthara for fan

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேள்வி நேரம் என்று ஒரு சிறப்பு அமர்வை தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்தார் விக்னேஷ் சிவன். இதில் பல ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தங்களுடைய கேள்விகளை கேட்டனர். இந்த கேள்விகளுக்கு விக்னேஷ் சிவன் கூறியிருக்கும் பதில்கள் அனைத்துமே பல புதிய தகவல்களாக நமக்குத் தெரிய வந்துள்ளன.

அதன்படி நயன்தாராவை வெஸ்டர்ன் உடையில் பிடிக்குமா? பாரம்பரிய உடையில் பிடிக்குமா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, அவரை புடவையில் பார்ப்பதற்கு மிகவும் விரும்புவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருக்கிறார். இதேபோல் செல்வராகவன் இயக்கத்திலான படைப்புகளை, காணும்போது அவர் தன்னுடைய கிரியேட்டிவான படைப்பினால் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஆச்சரியப்படுத்துவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து தனக்கு பிடித்த விஜய் நடித்த படம் கில்லி என்றும் சமந்தா ஒரு அருமையான நடிகை மட்டுமல்லாது மனிதநேயம் மிக்கவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்காக நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட பிரத்தியேகமான தனி புகைப்படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். நயன்தாராவுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட சீக்ரெட் புகைப்படத்தை பகிருங்கள் என்று ரசிகர் கேட்ட கோரிக்கைக்கு தான் இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இதனிடையே நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த திரைப்படம் பிரபல ஓடிடியில் வெளியாகும் என்று உறுதி செய்யப் பட்டுள்ளதுடன் இந்த திரைப்படத்தின் சிங்கிள் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் சிங்கிள் வெளியானது. இதன் இன்னொரு சிங்கிள் பாடல் ஜூலை மாதம் வெளியாகும் என்று முன்பே விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படங்களும் பதில்களும் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

ALSO READ: ஸ்டார்ட் மியூசிக்.. "தளபதி65" பட ஹீரோயின் பதிவிட்ட செம்ம அப்டேட்! வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

vignesh shivan shares secret pic of him and nayanthara for fan

People looking for online information on Kaathuvaakula Rendu Kaadhal, Naanum Rowdy Dhaan, Nayanthara, Netrikann, Vignesh shivan will find this news story useful.