www.garudabazaar.com

BREAKING: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த 2 படங்கள்!! .. பட்டையை கிளப்பும் தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் பரபரப்பான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நயன்தாரா. ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் வெளியாகியிருந்த 'மூக்குத்தி அம்மன்' (2020) படத்தில் கடைசியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தோன்றினார்.

nayanthara signed in 2 films under these production breaking

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே படத்தில் நயன்தாரா நடிக்கிறார். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதேபோல், 2015 ஆம் ஆண்டில் 'நானும் ரவுடி தான்' படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதியும் நயன்தாராவும் மீண்டும் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் கைகோர்க்கின்றனர். இந்த படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளார்.

nayanthara signed in 2 films under these production breaking

இந்நிலையில் தான் நயன்தாரா நடிப்பிலான அடுத்த இரண்டு முக்கிய திரைப்படங்கள் தொடர்பான நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பேஷன் ஸ்டுடியோஸூடன் நயன்தாரா இரண்டு திரைப்படங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

nayanthara signed in 2 films under these production breaking

இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸூடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ் சீதக்காதி (2018), பெட்ரோமேக்ஸ் (2019) பென்குயின் (2020), அந்தகாரம் (2020) ஆகிய படங்களை சமீபத்தில் தயாரித்திருந்தது.

nayanthara signed in 2 films under these production breaking

இதனிடையே 'அவள்' திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரில்லர் படமான நெற்றிக்கண் படம் பிரபல OTT தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாரில், வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "லூசிஃபரை" அடுத்து இணையும் "பிருத்விராஜ் - மோகன்லால்" காம்போ!.. டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு!

மேலும் செய்திகள்

nayanthara signed in 2 films under these production breaking

People looking for online information on Abhishek pictures, Nayanthara, Passion Studios will find this news story useful.