''படுபாவிகளா, ஐபிஎல்லே இல்லாம பண்ணிட்டிங்களேடா'' - RCBக்காக பிரபல இயக்குநர் வேதனை
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால் ஊரடங்கு உத்தரவு அவசியமாகிறது. இதற்கு இன்னும் தீர்வு காணப்படாததால் அரசுக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. வணிகம் உள்ளிட்டவைகள் நாட்டில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவின் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது ட்விட்டர் பக்கத்தில், படுபாவிகளா., லோகோவெல்லாம் மாத்தி இந்தவாட்டி கோப்பைய அடிச்சிடலாம்னு வெறியா இருந்தோமேடா., இப்படி அநியாயமா IPL டோர்னமெண்ட்டே இல்லாம பண்ணிட்டீங்களேடா என்று குறிப்பிட்டுள்ளார்.
படுபாவிகளா., லோகோவெல்லாம் மாத்தி இந்தவாட்டி கோப்பைய அடிச்சிடலாம்னு வெறியா இருந்தோமேடா., இப்படி அநியாயமா IPL டோர்னமெண்ட்டே இல்லாம பண்ணிட்டீங்களேடா 😭 #IPL #RCB #StayHomeBold
— 𝐑𝐚𝐧𝐣𝐢𝐭 𝐉𝐞𝐲𝐚𝐤𝐨𝐝𝐢 (@jeranjit) March 25, 2020