www.garudabazaar.com

Repeat Repeat Repeat”… திரும்ப திரும்ப வரும் ரசிகர்கள்…. டிரீம் வாரியர்ஸ் வெளியிட்ட மாஸான KGF 2 pic!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் 2 திரைப்படம் முதல்வார இறுதியைக் கடந்து தற்போது இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

Dream warriors pictures shared a viral kgf 2 pic

Also Read | ஒவ்வொரு வசனமும் ‘PUNCH’தான்… சிலிர்த்து சில்லறைய செதற விட்ட ரசிகர்கள் – எழுதியது இந்த நடிகரா?

உலகளவில் வரவேற்பு…

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎஃப் 2, திரைப்படத்தை தமிழில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். கேஜிஎஃப் 2 திரைப்படம் 10,000 திரையரங்குகளில் வெளியானது. தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) முதல் நாளில் ரிலீஸானது. ஆனால் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளியானது முதல் உலகம் எங்கும் அமோகமான வரவேற்பை கேஜிஎஃப் 2 பெற்றுவருகிறது.

Dream warriors pictures shared a viral kgf 2 pic

வசூல் வேட்டை…

கேஜிஎஃப் 2 வெளியானது முதல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் 240 கோடி ரூபாயை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் சிறப்பான வசூலை செய்து வருகிறது. பல புறநகர்ப் பகுதிகளில் படத்துக்குக் கூட்டம் அதிகமாக வருவதாக கூடுதலாக நாற்காலிகள் போட்டு காட்சிகள் திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே நள்ளிரவு காட்சிகள் மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன. மொத்தம் நான்கு நாட்களில் உலகளவில் 540 கோடி ரூபாயை இந்த படம் மொத்தமாக வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் சாதனையாகப் பாரக்கப்படுகிறது. உலகளவிலும் கேஜிஎஃப் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

Dream warriors pictures shared a viral kgf 2 pic

Repeat ஆடியன்ஸ்…

ரிலீஸாகி முதல் வார இறுதி நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் கூட்டம் குறையாமல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக ரிப்பீட் ஆடியன்ஸ் என சொல்லப்படும் படத்தைப் பார்த்த ரசிகர்களே திரும்ப திரும்ப பார்ப்பதும் அமைந்துள்ளது. இது சம்மந்தமாக படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ள டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தோடு “ரிப்பீட்… ரிப்பீட்… ரிப்பீட்.. எங்களுக்கு பிடித்திருக்கிறது. அபரிமிதமான இந்த வரவேற்புக்கு நன்றி” எனக் கூறியுள்ளனர். 

Also Read |  விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிட்ட'ROCKY' படத்தின் செம்ம ரிலீஸ் அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Dream warriors pictures shared a viral kgf 2 pic

People looking for online information on Dream Warriors Pictures, KGF Chapter 2 Movie, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.