Pisasu 2
www.garudabazaar.com

FAMILY MAN இயக்குனர்களோடு இணைந்த விஜய் சேதுபதி… Title உடன் வெளியான புதிய போஸ்டர் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாகித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் ராஷிகண்ணா நடிக்கும் புதிய வெப் சீரிஸ் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது ப்ரைம் ஓடிடி தளம்.

Family man directors VJS next web series titled as farzi

Also Read | விஜய் தேவரகொண்டா கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்! கண்ணீர் விட்டு அழுத சமந்தா.. வைரல் வீடியோ

சர்ச்சையைக் கிளப்பிய பேமிலி மேன்…

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் முதலாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அந்தத் தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் இந்த வருடம் ஜூன் மாதம் இந்தியில் வெளியானது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், குறிப்பிட்ட சில காட்சிகளில் தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. தமிழகத்தில் இந்த சீரிஸுக்கு பலமான எதிர்ப்பு எழுந்தது. இந்த சீரிஸை தடை செய்யவேண்டுமெனவும் குரல்கள் எழுந்தன. இதில் நடித்திருந்த சமந்தாவுக்குக் கனடனங்களும் எழுந்தன.

Family man directors VJS next web series titled as farzi

உளவுபார்க்கும் கண்டுபிடிக்கும் அதிகாரிகள்

மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர், சமந்தா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணையர்கள் இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். இவர்களே முதல் சீசனையும் இயக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டு சீசன்களுமே பயங்கரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தன.  நாட்டின் பாதுகாப்புக்காக உளவு வேலைப் பார்க்கும் ரா அதிகாரியான மனோஜ் பாஜ்பாய் ஈடுபடும் மிஷன்களும், அவர் குடும்பத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் என இரண்டாகக் கதை சொல்லப்பட்டு இருந்தது.

Family man directors VJS next web series titled as farzi

விஜய் சேதுபதி…

இந்நிலையில் சர்ச்சையைக் கிளப்பிய ராஜ் மற்றும் டி கே ஆகிய இயக்குனர்களோடு விஜய் சேதுபதி புதிதாக ஒரு வெப் சீரிஸுக்கு இணைவதாக அறிவிப்பு முன்பே வெளியானது. மேலும் இந்த சீரிஸில் பாலிவுட் நடிகரான ஷாகித் கபூர் மற்றும் ராஷிகண்ணா ஆகியோரும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது இந்த சீரிஸ் பற்றிய அறிவிப்பை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸுக்கு FARZI எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்து, புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Family man directors VJS next web series titled as farzi

கதைக்களம்…

மேலும் இந்த சீரிஸ் பற்றி “தனது தாத்தாவின் அச்சகத்தில் பணிபுரியும் இளைஞர், ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபடுகிறார். அந்த குற்றம் அவரை இருண்ட, உலகிற்கு அழைத்து செல்கிறது. இதைக் கண்டுபிடிக்க வரும் அதிகாரி ஒருவர் எவ்வாறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் த்ரில்லர்” என்று தெரிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

FAMILY MAN இயக்குனர்களோடு இணைந்த விஜய் சேதுபதி… TITLE உடன் வெளியான புதிய போஸ்டர் ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Family man directors VJS next web series titled as farzi

People looking for online information on Family Man, Family man directors, Farzi, Vijay Sethupathi, Web Series will find this news story useful.