Pattamboochi

கவனம் பெற்ற கங்கனாவின் ‘தாகத்’ … பிரபல ஓடிடி வெளியிட்ட பிரீமியர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாகத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kangana Ranaut latest movie Dhaakad OTT premiere

Also Read | ஆஹா.‌.நஸ்ரியாவின் "லீலா" கேரக்டர் போட்டோ ஷூட்.. வெளியான சூப்பர் புகைப்படங்கள்!

கங்கனா ரனாவத்…

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார். அவ்வப்போது தனது மனதில் பட்ட கருத்துக்களை தெரிவித்து கங்கனா ரனாவத் சர்ச்சையை கிளப்புவார். சமீபத்தில் கெஹ்ரையன், காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் படங்களுக்கும், ஆஸ்கார் - கிராமி விருதுகள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை கிளப்பின. 

‘தாகத்’ ரிலீஸும் வரவேற்பும்…

கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய ரிலீஸாக தனது ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ஏஜென்ட் அக்னி என்ற உளவாளியாக கங்கனா நடித்துள்ளார். ஆக்ஷன் நிரம்பிய இப்பாத்திரத்திற்காக உடலமைப்பை மாற்றியுள்ளார். ரஸ்னீஷ் காய் இயக்கிய இப்படம், மே 20 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்தி சினிமாவின் முதல் பெண் ஸ்பை த்ரில்லர் படம் இதுவாகும். ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களையோ வசூலையோ பெறவில்லை. 

Kangana Ranaut latest movie Dhaakad OTT premiere

ஓடிடி ரிலீஸ்…

இந்நிலையில் இப்போது தாகத் திரைப்படத்தின் ஓடிடி பிரிமீயர் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1 ஆம் தேதி ZEE 5 தளத்தில் பிரீமியர் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read | ”பொண்ணுங்க பத்தின வதந்தின்னா உண்மை?… அதுவே ஆண்கள்னா?... “ சமந்தாவின் பரபரப்பு Tweet

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut latest movie Dhaakad OTT premiere

People looking for online information on Dhaakad, Dhaakad OTT premiere, Kangana Ranaut, Kangana Ranaut latest movie will find this news story useful.