www.garudabazaar.com

“விடுதலை’ OC கேரக்டருக்கு 2nd Part-ல முடிவு இருக்கும்.”.. சேத்தன் & தேவதர்ஷினி ஜாலி பேட்டி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும், ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சேத்தன் பல ஆண்டுகளாக சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்து வந்தவர். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் சேத்தன், தற்போது விடுதலை திரைப்படத்தில் நடித்த அனுபவம் அற்றும் அதற்கான வரவேற்பு குறித்து, தனது மனைவியும் நடிகையுமான தேவதர்ஷினியுடன் இணைந்து பேட்டியாக அளித்தார்.

அதில், “விடுதலை திரைப்படம் பார்த்த பின்பு, பலரும் போன் பண்ணி பேசினார்கள். திருநெல்வேலிக்கெ உண்டான வார்த்தைகளை சொல்லி திட்டினார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என குறிப்பிட்டவர், தன்னை தன் மகளும் மனைவியும் படம் பார்க்கும்போது அடித்துக்கொண்டே இருந்தார்கள், அதுதான் இந்த கேரக்டருக்கு உண்மையான பாராட்டு என்றும் குறிப்பிட்டார். ஒரு பக்கம் நகைச்சுவையாக திரைப்படங்களில் நடிக்கும் தேவதர்ஷினி, இன்னொரு பக்கம் சேத்தன் இப்படி முழுமையாக வெறுக்கத்தக்க ஒரு நெகடிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறித்து பேசிய தேவதர்ஷினி, “இந்த கேரக்டர் மீது எவ்வளவு கோவம் வருகிறதோ, அந்த அளவுக்கு சந்தோஷம் இருந்தது” என குறிப்பிட்டார்.

வெற்றிமாறன் இந்த கேரக்டர் குறித்து விளக்கும்போது, “அந்த கேரக்டர் தனக்கு கீழிருக்கும் யாரையும் மதிக்காது, இதேபோல் தனக்கு மேல் இருக்கும் அதிகாரியை வாய்ப்பு கிடைத்தால் மதிக்காது, வேறு வழியின்றி அந்த அதிகாரத்துக்காக மட்டும் மேலதிகாரியை மதிக்கும். இப்படி போலீஸ் துறையில் மட்டுமல்லாமல், நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். பார்த்ததுமே அருவெருப்பு வரவேண்டும் என்றிருக்குமாறு இந்த கேரக்டரின் லுக் டிசைன் செய்யப்பட்டது. எனக்கு இந்த கேரக்டர் 22 நாள் சொன்னார்கள். ஆனால் 122 நாட்கள் ஆனது. அதே மாதிரி இந்த கேரக்டருக்கான முடிவு அடுத்த பாகத்தில் தெரியவரும்” என தெரிவித்தார்.

“விடுதலை’ OC கேரக்டருக்கு 2ND PART-ல முடிவு இருக்கும்.”.. சேத்தன் & தேவதர்ஷினி ஜாலி பேட்டி.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview

People looking for online information on Chetan, Vetrimaaran, Viduthalai will find this news story useful.