www.garudabazaar.com

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மேக்கிங்.. நடிகர் சூரி பகிர்ந்த மாஸ் வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூரி விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Actor Soori shares Viduthalai Movie Making Video

                           Images are subject to © copyright to their respective owners.

விடுதலை

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

துணைவன்

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

வீடியோ

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது. இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் விடுதலை படத்தின் சண்டை காட்சிகள் மேக்கிங் வீடியோவை நடிகர் சூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Soori shares Viduthalai Movie Making Video

People looking for online information on Soori, Viduthalai will find this news story useful.