www.garudabazaar.com

“விடுதலை -க்கு முன்பே மக்களோடு நின்றவர்”.. சூரியை பாராட்டி பிரபல இயக்குநர் ட்வீட்.. Viduthalai

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

udanpirappe Director Saravanan Praises Soori for Viduthalai

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இந்நிலையில் நரேன் நடித்த கத்துக்குட்டி, ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடிப்பில் உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்களை இயக்கிய இரா. சரவணன் நடிகர் சூரியை பற்றி, “‘விடுதலை’க்கு முன்னரே மக்களோடு மக்களாக நிற்கும் குமரேசன்தான் சூரி அண்ணன். ஜல்லிக்கட்டு தொடங்கி ஸ்டெர்லைட் எதிர்ப்பு வரை வெடித்த சூரி அண்ணனின் குரலை யாரும் மறக்க முடியாது. ‘விடுதலை’ மூலமாகப் புடம் போட்ட தங்கமாக, பழுக்கக் காய்ச்சிய கம்பியாக கம்பீரமாகி இருக்கிறார் ” என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

இதை ரீட்வீட் செய்த நடிகர் சூரி, “என்ன சொல்றதுன்னே தெரியலை அண்ணே.. மகிழ்ச்சியும் நன்றியும்... இன்னும் கடக்க வேண்டிய தூரத்துக்கு பெரும் ஊக்கம் உங்களுடைய பதிவு.. தொடர்ந்து பயணிப்போம் அண்ணே.. உங்கள் நந்தனை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

உடன்பிறப்பே திரைப்படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும், இயக்குநர் சரவணன் அடுத்து சசிகுமார் நடிப்பில் நந்தன் திரைப்படத்தை இயக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | சூரியை தானே பார்த்தோம்.. இந்த Scene-ல விஜய் சேதுபதி இருக்காரா.? வைரல் ஆகும் விடுதலை பட ஸ்டில்!

தொடர்புடைய இணைப்புகள்

udanpirappe Director Saravanan Praises Soori for Viduthalai

People looking for online information on R.Saravanan, Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.