www.garudabazaar.com

'சேது' படத்தை இந்தியில் இயக்கிய சதீஷ் கௌஷிக் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனரும் நடிகருமான சதீஷ் கௌஷிக் இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

Director and Actor Satish Kaushik has passed away at 66

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூர்யான்னு நெனச்சு சூரிய தேடி வந்த பாட்டி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம்!!

சதீஷ் கௌஷிக்

பாலிவுட் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக புகழ்பெற்றவர் சதீஷ் கௌஷிக். ஏப்ரல் 13, 1965 அன்று ஹரியானாவில் பிறந்த சதீஷ் ஆரம்ப நாட்களில் நாடகங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு, மாதூம் என்ற இந்தித் திரைப்படத்தில் சேகர் கபூருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார். திரைக்கதை மற்றும் வசன கர்த்தாவாகவும் சதீஷ் பணியாற்றியிருக்கிறார். கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் காலண்டர் எனும் கதாப்பாத்திரத்தில் சதீஷ் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பெரும்பாலான மக்களை கவர்ந்து வந்தார்.1990 இல் ராம் லக்கானுக்காகவும் 1997 இல் சாஜன் சாலே சசுரலுக்காகவும் சதீஷ் கௌசிக் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றிருக்கிறார்.

Director and Actor Satish Kaushik has passed away at 66

Images are subject to © copyright to their respective owners.

இயக்குநர்

சதீஷ் கௌஷிக் முதன் முதலில் இயக்கிய படம் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா ஆகும். ஸ்ரீதேவி, அணில் கபூர் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து பிரேம் படத்தையும் அவர் இயக்கினார். தமிழில் பாலா இயக்கி வெளியான படம் சேது. சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து பெருவாரியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை இந்தியில் 'தேரே நாம்' என்ற பெயரில் சதீஷ் இயக்கினார்.

இதில், சல்மான் கான், பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். இது இந்தியிலும் பெருமளவு பேசப்படும் படமாக சதீஷ் கௌஷிக்கிற்கு அமைந்தது. அதுமட்டும் அல்லாமல் பல படங்களை தயாரித்தும் வந்தார் சதீஷ். இப்படி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக கலைஞராக திகழ்ந்தவர் சதீஷ்.

Director and Actor Satish Kaushik has passed away at 66

Images are subject to © copyright to their respective owners.

சோகம்

இந்த நிலையில் இன்று அதிகாலை சதீஷ் கௌஷிக் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் சதீஷ் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் அவரது நண்பரும் நடிகருமான அனுபம் கேர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"மரணமே வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மை என்பது எனக்கு தெரியும். ஆனால், எனது சிறந்த நண்பன் சதீஷ் கௌஷிக் பற்றி இப்படி பதிவை  எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 45 வருட நட்புக்கு இப்படி ஒரு திடீர் முற்றுப்புள்ளி. நீங்கள் இல்லாமல் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்! ஓம் சாந்தி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் அக்ஷய் குமார், அலி ஃபைசல், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் சதீஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். பன்முக கலைஞராக வலம்வந்த சதீஷ் கௌஷிக்கின் மறைவு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "விடுதலை படத்துக்கு முதல்ல போட்ட பட்ஜெட் இத்தனை கோடி ரூபாய் தான்".. மனம் திறந்த வெற்றிமாறன்!

தொடர்புடைய இணைப்புகள்

Director and Actor Satish Kaushik has passed away at 66

People looking for online information on Satish Kaushik, Satish Kaushik passed away will find this news story useful.