www.garudabazaar.com

'என்றாவது ஒரு நாள்' விதார்த்துடன் கைகோர்த்த 'சேதுபதி' கூட்டணி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கி வரும் 'என்றாவது ஒரு நாள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது. கால்நடை வளர்ப்பு, தண்ணீர் பஞ்சம், உலக மயமாக்கல், குழந்தை தொழிலாளிகள் என பல்வேறு விஷயங்களையும் வைத்து இப்படத்தின் திரைக்கதையை வெற்றி துரைசாமி எழுதியிருக்கிறார்.

Vetrimaaran released Endravadhu Oru Naal movie's First look

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் நடிகர் விதார்த் படத்தின் நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சேதுபதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ராகவனும் இதில் நடித்திருக்கிறார். 'தி தியேட்டர் பீப்பிள்' நிறுவனம் இப்படத்தின் வழியாக படத்தயாரிப்பில் கால் பதிக்கிறது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்துக்கு எடிட்டராக காசி விஸ்வநாதனும், ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரமும் பணியாற்றி உள்ளனர். பாடல்கள் அனைத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். உண்மை சம்பவங்களை தழுவி உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran released Endravadhu Oru Naal movie's First look

People looking for online information on Vetrimaaran will find this news story useful.