Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

"பரபர ட்விஸ்ட்.. விறுவிறு திரைக்கதை" - வெற்றி, ஷீலா நடிக்கும் ‘ஜோதி’.. குவியும் பாராட்டுகள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

Vetri Sheela Rajkumar Jothi Suspense thriller film

Also Read | ரசிகர்களுடன் சூரரைப் போற்று படத்த தியேட்டர்ல பார்த்த அனுபவம்.. மனம் திறந்த சுதா கொங்கரா!

வெற்றி,  ஷீலா ராஜ்குமார் (அருள் ஜோதியாக), கிரிஷா குரூப்,  இளங்கோ குமரவேல், மைம் கோபி , நான் சரவணன், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் நடித்த இந்த திரைப்படத்தை AV கிருஷ்ண பரமாத்மா இயக்க, SP ராஜா சேதுபதி தயாரித்துள்ளார்.

குழந்தைகள் கடத்தல் சம்பவம், கிராம- நகர்ப்புறங்களில் கண்ணுக்கு தெரியாத அளவில் போகிற போக்கில் நடக்கும் மருத்துவ மாஃபியா ஆகியவற்றுக்கு எதிரான ஒரு கர்ப்பிணி பெண்ணின் அறச்சீற்றமே, சஸ்பென்ஸ் கொடுக்கும் காட்சிகளால் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ஜோதி’ திரைப்படம்.

செசி ஜெயா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். சத்ய மூர்த்தி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பாடல்களை கார்த்திக் நேத்தா எழுத கே. ஜே ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  பெண்மணி அந்த குழந்தையோடு குடும்பத்தாருடன் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தியதுடன், “காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ், சீனுக்கு சீன் ட்விஸ்ட், யூகிக்க முடியாத திரைக்கதையை, கருத்தும் கமர்ஷியலும் என கலந்து சொல்லி இருக்கின்றனர்.. இது மிகச்சிறந்த திரைப்படம்” என பாராட்டு தெரிவித்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது: - “இப்படம் ஒரு  உண்மை சம்பவம் மட்டுமில்லாமல் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40,000 குழந்தைகள் தொலைந்து அதில் 11,000 குழந்தைகள் கண்டுபிடிக்க படாமலே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல்போகின்றன. இப்படம் ஒரு ஆணோட கோபத்தைவிட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி கூறியதாவது, “இந்த உண்மை சம்பவத்தை அறியும் போது இதை படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக்கல்லூரியில் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும்படத்தை பார்த்து இருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் இந்த சம்பவத்தை எழுதி இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த குழந்தையிடம் இருந்து, இந்த படத்தை ஆரம்பித்தமோ அந்த குழந்தையை கொண்டுவந்து உங்கள் முன் காட்டுகிறோம்” எனக் கூறி அக்குழந்தையையும், குடும்பத்தையும் காட்டும்போது அனைத்து பத்திரிக்கையாளர்களும் கனிவுடன் பார்த்தனர். குழந்தை காணாமல் போன வலியால் அப்பெண்மணி பேச முடியாமல் திகைத்தார். ஜோதி திரைப்படம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். ஜோதி திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

மேலும், கடலூர், வடலூர், நெய்வேலி பகுதிகளில் அளவான பட்ஜெட்டில் எளிமையான மனிதர்களால் சாமானியர்களின் உண்மைக் கதையை தழுவி படமாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு அனைவரும் ஆதரவு தரும்படியாகவும் தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஜோதி திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

Also Read | அட.. புதிய படத்தில் இணையுறாங்கப்பா நம்ம ‘அசுரன்’ அம்மு & ‘குக் வித் கோமாளி’ புகழ்.!

Vetri Sheela Rajkumar Jothi Suspense thriller film

People looking for online information on Jothi, Sheela Rajkumar, SP Raja Sethupathi, Vetri will find this news story useful.