www.garudabazaar.com

''என் ஆயுளை கூட அவருக்கே கொடுத்துடு...'' - பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி நாடு முழுவதும் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் ஒரு சேர பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பலரும் தங்களுக்கு மிகவும் விருப்பமான எஸ்பிபியின் பாடல்களை பகிர்ந்து நலம் பெற வேண்டினர்.

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் ரசிகர்களின் பிரார்த்தனை அவரை நலம் பெற வைக்கும் என அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவருக்காக வேண்டிக்கொள்ளும் ரசிகர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி கூறினார்.

Veteran Actress Saroja Devi about Singer SP Balasubrahmanyam | எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உருக்கம்

அதன் ஒரு பகுதியாக பழம்பெரும் நடிகை சரோஜா தேவி எஸ்.பி.பி குறித்து தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். அதில், ''பாலுவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர்.

அவரை சந்திக்கும் போதெல்லாம், நீங்கள் தேன் சாப்பிடுகிறீர்களா ? உங்கள் குரல் இனிமையாக இருக்கிறதே என்பேன். கடவுளிடம் என் ஆயுளை கூட அவருக்கே கொடுத்துவிடு, அவர் குணமாகி வந்து நீண்ட வருடங்கள் அவரே பாட வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்'' என்றார்.

Veteran Actress Saroja Devi about Singer SP Balasubrahmanyam | எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உருக�

People looking for online information on Saroja devi, SP Balasubrahmanyam, SPB will find this news story useful.