"உயிரோட இருக்கேன்".. 90S சீரியல் நடிகர் வேணு அரவிந்த் இப்போ எப்படி இருக்கார்? Exclusive
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான வேணு அரவிந்த், ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்.
Also Read | அசீம்க்கு ரொம்ப தைரியம்.. நீதிபதி மேலேயே புகார் சொல்றாரு! வைரல் வீடியோ
இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய தொலைக்காட்சி சீரியல்களான 'காதல் பகடை' (1997), 'காசளவு நேசம்' (1999) உள்ளிட்ட தொடர்களின் மூலம் புகழ் பெற்ற வேணு அரவிந்த், பின்னர் ராதிகா சரத்குமார் இயக்கிய 'செல்வி' (2005-2009), 'சந்திரகுமாரி' (2019) போன்ற சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் சீரியலான 'வாணி ராணி' (2013-2018) சீரியலில் பூமிநாதன் என்கிற இவரது கதாபாத்திரம் மிகவும் பாராட்டுக்களைப் பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'அலைபாயுதே' (2000), சிலம்பரசனின் 'வல்லவன்' (2006) போன்ற திரைப்படங்களிலும் வேணு அரவிந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகர் வேணு அரவிந்த் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் உயிரோடு இருக்கேன். உற்சாகமாக இருக்கிறேன். தலையில் ஒரு கட்டி இருந்தது. மருத்துவ சிகிச்சை மூலம் அதை சரி செய்தேன். இப்போது நலமாக உள்ளேன். பிசியோதெரபி சிகிச்சையில் உள்ளேன்." என கூறினார்.
நடிகர் வேணு அரவிந்த், கொரோனா காரணமாக சில வருடங்களுக்கு முன் பாதிக்கப்பட்டார் அதைத் தொடர்ந்து நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இவருக்கு மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்கு, ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது வேணு அரவிந்த் நலமோடு உள்ளார்.
Also Read | தெலுங்கிலும் அசத்தும் லவ் டுடே.. பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்! வைரல் வீடியோ
"உயிரோட இருக்கேன்".. 90S சீரியல் நடிகர் வேணு அரவிந்த் இப்போ எப்படி இருக்கார்? EXCLUSIVE வீடியோ