www.garudabazaar.com

தல அஜித் பட தயாரிப்பாளருடன் இணைந்த மரகத நாணயம் இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா? செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017-ஆம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ராணி, முனிஸ் காந்த்,எம்.எஸ்.பாஸ்கர், காலி வெங்கட், மைம் கோபி, ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மரகத நாணயம்.

ajith movie producer again join with hiphop tamizha

ARK சரவன் இந்த படத்தை இயக்கி இருந்தார். திபு நினன் தாமஸ் இசையில் டிவி சங்கர் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். டில்லி பாபு இந்த படத்தை தயாரித்து இருந்தார். பேஃன்டசி காமெடி வகைமையில் இந்த படம் அமைந்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

ajith movie producer again join with hiphop tamizha

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சர்வன் தன் சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். தற்போது இவர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். சத்யஜோதி நிறுவனம் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ajith movie producer again join with hiphop tamizha

சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரிப்பில் ஹிப்பாப் தமிழா ஆதி இயக்கி நடித்த சிவக்குமாரின் சபதம் படம்  செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆதி, சத்ய ஜோதி தயாரிப்பில் அட்லியின் உதவியாளர் அஸ்வின் ராம் இயக்கும் அன்பறிவு படத்தில் நடித்து வருகிறார்.

ajith movie producer again join with hiphop tamizha

சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் டீசர் வெளியாகியது. இதில் ஆதியுடன் விதார்த், நெப்போலியன் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை காஷ்மீரா இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ajith movie producer again join with hiphop tamizha

அன்பறிவு படத்தை தொடர்ந்து ஆதி, சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில், மரகதநாணயம் இயக்குனர் சரவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (08.10.2021) வெளியானது. இந்த படம் ஆதியின் ஆறாவது படமாக உருவாகிறது. 2022 ஆம் ஆண்டு இந்த படம் திரைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்

ajith movie producer again join with hiphop tamizha

People looking for online information on Ajithkumar, Hiphop Tamizha, Sathya Jyothi will find this news story useful.