ஒரே வாரத்தில் இமாலய வசூலை குவித்த பொன்னியின் செல்வன்.. மொத்த வசூல் நிலவரம்! வேற லெவல்
முகப்பு > சினிமா செய்திகள்அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
![Ponniyin Selvan PS1 Crossed 300 Crore Box Office Collection Ponniyin Selvan PS1 Crossed 300 Crore Box Office Collection](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/ponniyin-selvan-ps1-crossed-300-crore-box-office-collection-photos-pictures-stills.jpeg)
Also Read | பிரபல நடிகர் அருண் பாலி மறைவு.. தான் நடித்த கடைசி படம் ரிலீசான அதே நாளில் நடந்தேறிய சோகம்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். இது வரை தமிழகம் முழுவதும் 100+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நாளில் 300 கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியுள்ளது.
Success beyond boundaries!
Thank you for this tremendous response ❤️ 🔥#PS1 #PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/XMdztUnkGc
— Lyca Productions (@LycaProductions) October 7, 2022
Also Read | 19 வகை உணவுகளுடன் விருந்து.. அசந்து போன பூஜா ஹெக்டே! அம்மா ஸ்பெஷல்னா சும்மாவா