'திரௌபதி'க்காக வன்னியர் வளர்ச்சி இயக்கம் வித்தியாசமான வேண்டுதல் - வெளியான ஃபோட்டோஸ்
முகப்பு > சினிமா செய்திகள்'திரௌபதி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. மாற்று சாதியில் திருமணம் செய்வது பற்றிய அந்த டிரெய்லரின் கருத்துக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், மற்றொரு பக்கம் ஆதரவும் பெருகி வருகிறது.
![திரௌபதி படம் வெற்றியடைய வன்னியர் வளர்ச்சி இயக்கம் வித்தியாசமான முயற்சி | Vanniyar Valarchi Iyakkam Do this Ritual for Draup திரௌபதி படம் வெற்றியடைய வன்னியர் வளர்ச்சி இயக்கம் வித்தியாசமான முயற்சி | Vanniyar Valarchi Iyakkam Do this Ritual for Draup](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vanniyar-valarchi-iyakkam-do-this-ritual-for-draupathi-film-success-news-1.jpeg)
அதன் ஒரு பகுதியாக 'திரௌபதி' படம் வெற்றி பெற வேண்டி வன்னியர் வளர்ச்சி இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் ஸ்ரீமணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
'திரௌபதி' படத்தில் ரிஷி ரச்சர்டு ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மோகன் ஜி இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.