உடைந்து போன தந்தையிடம் ஹீரோ கேட்கும் அந்த உதவி..? - திரௌபதி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரிச்சர்ட் ரிஷி நடித்த திரௌபதி படத்தின் ஸ்னீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

திரௌபதி படத்தின் ஸ்னீக் பீக் | draupathi movie's sneak peak is out

ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இத்திரைப்படத்தை பழைய வன்னாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஷீலா ராஜ்குமார், லேனா, கருணாஸ், ஜீவா ரவி ஆகியோர் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அண்மையில் வெளியான திரௌபதி படத்தின் டீசருக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது திரௌபதி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. காதலித்து திருமணம் செய்து, இப்போது ஏமாந்து போன மகளின் தந்தை அதை நினைத்து உடைந்து அழ, எனக்கொரு உதவி வேணும் என ஹீரோ கேட்பது போல இந்த ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. அப்படி அவர் என்ன உதவி கேட்டார் என்பதை, 28-ஆம் தேதி தியேட்டரில் படம் வெளியாகும் அன்று அறியலாம்.

உடைந்து போன தந்தையிடம் ஹீரோ கேட்கும் அந்த உதவி..? - திரௌபதி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வீடியோ

Entertainment sub editor