www.garudabazaar.com

VanithavsRamyaKrishnan: "அது எப்படி சொல்லலாம்?".. அனல் பறக்கும் வாக்குவாதம்!.. பரபரப்பு #BBJodigal ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை கொண்டு விஜய் டிவியில் நடந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள்.

Vanitha RamyaKrishnan controversy BBJodigal Vijay Tv Promo

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதில் தற்போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போட்டியாக புதிய வகையிலான நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக அமர்ந்துள்ளனர்.

Vanitha RamyaKrishnan controversy BBJodigal Vijay Tv Promo

இதில் சந்திரமுகி, பத்ரகாளி என பலவிதமான வேடங்களை போட்டியாளர்கள் போட்டுக் கொண்டுள்ளனர். அனைவரும் தீவிரமாக நடனமும் ஆடுகின்றனர்.  ரம்யா கிருஷ்ணன் கமெண்ட்ஸ் சொல்லுகிறார். அப்போது பத்ரகாளி வேடத்தில் நடனமாடிய வனிதா, “போட்டியாளர்களை கம்பேர் பண்ண வேண்டாம்” என்று ரம்யா கிருஷ்ணனிடம் கூறுகிறார்.

அதற்கு கோபப்பட்ட ரம்யா கிருஷ்ணன், “கம்பேர் பண்ண வேண்டாம் என்று யாராவது எப்படி சொல்ல முடியும்?.. என்ன இது?” என்று கேட்கிறார். இதனை அடுத்து உடனே வனிதா நிகழ்ச்சியை விட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறுவதை காணமுடிகிறது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பற்றி வனிதா வேறு ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:உதவி இயக்குநரின் இப்படி ஒரு ‘பாலிசிக்காக’.. லொகேஷனையே மாற்றிய 'சிவகார்த்திகேயன்' பட இயக்குநர்! நெகிழ வைக்கும் பதிவு.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், அந்த குறிப்பிட்ட சம்பவம் நடந்த இந்த ப்ரோமோ, தற்போது விஜய் டிவியில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.

VANITHAVSRAMYAKRISHNAN: "அது எப்படி சொல்லலாம்?".. அனல் பறக்கும் வாக்குவாதம்!.. பரபரப்பு #BBJODIGAL ப்ரோமோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha RamyaKrishnan controversy BBJodigal Vijay Tv Promo

People looking for online information on BBJodigal, BiggBossJodigal, Biggbosstamil, Controversy, Promo, Ramya Krishnan, Trending, Vanitha, Vanithavijaykumar, Vanithavsramyakrishnan, VijayTelevision, Viral will find this news story useful.