www.garudabazaar.com

"லிங்குசாமி பட ஷூட்டிங்.. ஷங்கர் விசிட்!".. #RC15-க்கும் இந்த படத்துக்கும் இப்படி ஒரு கனெக்‌ஷனா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்குகிறார்.

shankar at lingusamy movie shoot both movies have this connect

கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா ஆகியோர் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சியை அன்பறிவ் அளிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. உடன் இந்த படத்தின் நாயகன், நாயகிகளுடன் நடிகை நதியாவும் இடம் பெற்றுள்ளார். இதனிடையே ராம் சரணுடன் இயக்குநர் ஷங்கர் கைகோர்க்கும் #RC15 படத்தின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உண்மையில் ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்துக்கும், ஷங்கர் இயக்கும் #RC15 படத்துக்குமான ஒற்றுமை ஒன்று இருக்கிறது. ஆம், தமிழ்- தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த இரண்டு திரைப்படங்களிலுமே, சாய் மாதவ் புர்ரா தான் தெலுங்கு மொழிக்கான வசனங்களை எழுதுகிறார்.

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுளியின் அடுத்த படம் ​​ஆர்.ஆர்.ஆர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இந்த திரைப்படம் உள்ளிட்ட பல தெலுங்கு சினிமாக்களில் பணியாற்றிய பிரபல திரைக்கதை எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: உதவி இயக்குநரின் இப்படி ஒரு ‘பாலிசிக்காக’.. லொகேஷனையே மாற்றிய 'சிவகார்த்திகேயன்' பட இயக்குநர்! நெகிழ வைக்கும் பதிவு.

தொடர்புடைய இணைப்புகள்

shankar at lingusamy movie shoot both movies have this connect

People looking for online information on Lingusamy, Ram Charan, Ram Pothineni, Shankar will find this news story useful.