www.garudabazaar.com

‘பாலாவுடன் love-ஆ..!’..CWC 3-ல இருக்கேனா? பாலா பற்றி சீக்ரெட் பகிர்ந்த ரித்திகா.. Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 அண்மையில் தான் நிறைவடைந்தது.

Cook with comali rithika reveals secret about bala and CWC3 Video

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குக்குகள் மற்றும் கோமாளிகள் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்ததுடன், அவர்களின் பேராதரவையும் பெரும் அன்பையும் பெற்று அவர்களின் இல்லத்தில் ஒருவராகவே மாறிப் போயினர்.

இந்நிகழ்ச்சி மூலம் குறிப்பாக புகழ், பவித்ரா, தர்ஷா, அஸ்வின், சிவாங்கி, பாபா பாஸ்கர், பாலா, ரித்திகா ஆகியோர் இந்த சீசன் முழுவதும் மறக்க முடியாத பல மகிழ்ச்சியான தருணங்களை பார்வையாளர்களுக்கு வழங்கினர்.

Cook with comali rithika reveals secret about bala and CWC3 Video

இந்நிலையில் தான்,  “பாலாவை காதலிக்கிறீர்களா?” என்கிற கேள்வி உட்பட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ரித்திகா. பிரபல சீரியல் நடிகையான ரித்திகா தனது சமீபத்திய நேரலை வீடியோவில் ரசிகர்களுடனான பல்வேறு கேள்வி பதில் செஷனில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “மீண்டும் மீண்டும் நிறைய பேர் பாலாவை லவ் பண்றேனானு கேக்குறீங்க.. திரையில் வரும் ஒவ்வொரு ஆக்டிவிட்டியுமே பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகவே.. டிவியில் பார்ப்பதை டிவியுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். நிகழ்ச்சியை நிகழ்ச்சியாகவே பாருங்கள்” என கேட்டுக்கொண்டதுடன், “பாலா நல்ல நண்பர். அவருக்கு கடவுள் பக்தி அதிகம்.” என்கிற சீக்ரெட்டையும் பகிர்ந்துள்ளார்.  

ALSO READ: விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் பிரபலம்! வரி விலக்கு தொடர்பாக பரபரப்பு கருத்து!

மேலும், “குக் வித் கோமாளி டீமை குழுவாக மிஸ் பண்ணுகிறேன்.. குக் வித் கோமாளியின் 3 வது சீசனில் மறுபடியும் என்னை கூப்டுவாங்களா? தெரியலயே?” என பேசினார். பின்னர் ஒரு பாடலையும் பாடுகிறார். இந்த வீடியோவை இணைப்பில் காணலாம்.

‘பாலாவுடன் LOVE-ஆ..!’..CWC 3-ல இருக்கேனா? பாலா பற்றி சீக்ரெட் பகிர்ந்த ரித்திகா.. VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook with comali rithika reveals secret about bala and CWC3 Video

People looking for online information on Bala, CookWithComali2, CWC Bala, CWC Rithika, CWC2, CWC3, Vijay Television will find this news story useful.