www.garudabazaar.com

ஷாலினி அஜித் பெயரில் மோசடி? அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பரபர அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகையும் நடிகர் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித்குமாரின் டிவிட்டர் கணக்கு குறித்து அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா பரபர டிவீட் செய்துள்ளார்.

suresh chandra about shalini ajithkumar twitter account

"வலிமை" ரிலீஸ் தேதி இது தான்! புதிய போஸ்டருடன் போனிகபூர் வெளியிட்ட OFFICIAL அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார்.

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகர். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

suresh chandra about shalini ajithkumar twitter account

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி பெயரில் டிவிட்டரில் நேற்று ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. பிரபல சினிமா பிரபலங்களும் அந்த கணக்கை பின் தொடர தொடங்கினர். ரசிகர்கள் பலருக்கும் அந்த கணக்கின் மீது சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பரபரப்பாக இது குறித்து டிவீட் செய்துள்ளார்.

அதில், அது போலி ட்விட்டர் கணக்காக உள்ளது. திருமதி ஷாலினி அஜித்குமார் அவர்கள் ட்விட்டரில் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தயவுசெய்து அந்த கணக்கை புறக்கணிக்கவும். என சுரேஷ் சந்திரா டிவீட் செய்துள்ளார்.

suresh chandra about shalini ajithkumar twitter account

அஜித் நடிப்பில் வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் வலிமை படம் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது

இயக்குனர் மணிரத்னத்திற்கு புனே MIT பல்கலைக்கழகம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்! முழு விபரம்

தொடர்புடைய இணைப்புகள்

suresh chandra about shalini ajithkumar twitter account

People looking for online information on Ajith Kumar, டிவிட்டர், ஷாலினி அஜித், Shalini, Shalini Ajith, Shalini ajith kumar, Twitter will find this news story useful.