'V1' ஹீரோவின் அடுத்த சம்பவம்.. அதுவும் செம்ம ஜானர்ல.. பூஜையுடன் வெளியான ‘த்ரில்லர்’ அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை, 11 பிப்ரவரி 2022: "வி1" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் ராம் அருண் காஸ்ட்ரோ நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வி1 - மர்டர் கேஸ்
2019-ஆம் ஆண்டு வெளியாகி பல எண்ணற்ற ரசிகர்களின் பாராட்டுக்களை வென்ற திரைப்படம் "வி1". இப்படத்தின் நாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருந்தார். புதுமுகமாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார் ராம் அருண் காஸ்ட்ரோ.
மூன்றாவது படத்தின் பூஜை
தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. ஐடா பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தங்க மீனா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஷ் பாலசந்திரன் இயக்குகிறார். இவர் இந்தியன் 2, பூமிகா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கலாஜிக்கல் திரில்லர்..
சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தில், பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனிடம் பணியாற்றிய நித்யானந்தம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். பரியேறும் பெருமாள், ராக்கி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராமு தங்கராஜ் இப்படத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். காஸ்ட்யும் டிசைனராக ஒஷின் அனில் பணிபுரிய, மக்கள் தொடர்பு பணியை AIM சதிஷ் கவனித்துக் கொள்கிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Also Read: "சத்தியமா செத்துருவேன் ஜூலி".. "பண்ணுங்க வனிதா அக்கா".. ஜூலியின் அசுர ஆட்டம் Started!