’வடசென்னை’ பாவெல் நவகீதன் இயக்கத்தில் ’V1 மர்டர் கேஸ்’
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 17, 2019 06:10 PM
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான ’வடசென்னை’ படத்தில் தனுஷின் நண்பராக முக்கிய வேட த்தில் நடித்தவர் பாவெல் நவகீதன்.இவர் இதற்கு முன்பு மெட்ராஸ், குற்றம் கடிதல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மாதம் வெளியாக உள்ள ’V1 மர்டர் கேஸ்’ படம் மூலம் இவர் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.பேரடைம் பிக்சர்ஸ், கொலர்ஃபுல் பீட்டா மூமண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் ஒரு முழு நீள கிரைம் திரில்லராக உருவாகி உள்ளது.
புதுமுகங்களான ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா பிள்ளை மற்றும் மைம் கோபி நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Happy to launch the trailer of V1 Murder Case. Good luck to the team #V1FromDec27 @Pavelnavagethan @RamArunCastro @Saravan88916256 @LijeeshActor @linga_offcl @positiveprint_ @Muralidharan142 @arvraj21 @teamaimpr @gobeatroute https://t.co/xwtewuliMV
— Dhanush (@dhanushkraja) December 17, 2019
’வடசென்னை’ பாவெல் நவகீதன் இயக்கத்தில் ’V1 மர்டர் கேஸ்’ வீடியோ