www.garudabazaar.com

"நட்புக்காகவே இத பண்ணேன்" - உதயநிதி சொன்னதும் நெகிழ்ந்த சிம்பு | VTK

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

Udhayanidhi about Simbu Vendhu Thanindhathu Kaadu 50th day

Also Read | “அப்டேட் கேட்டே இருக்கீங்க..” - Fans-க்கு சிம்பு வெச்ச கோரிக்கை.. அதுக்கு காரணம் இவர்தானா?

இப்படத்தின் 50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக இவ்விழாவில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர். அவர்களது கடின உழைப்பில் இந்த படம்  சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ” என தெரிவித்தார். 

Udhayanidhi about Simbu Vendhu Thanindhathu Kaadu 50th day

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி.” என பேசினார்.

Udhayanidhi about Simbu Vendhu Thanindhathu Kaadu 50th day

இதனை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், “வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக  அமைந்ததற்கு இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள் தான் காரணம், அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தை முதலில் நான் தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு  இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார்.

Udhayanidhi about Simbu Vendhu Thanindhathu Kaadu 50th day

அவர் கேட்டுக் கொண்டதால் சிம்புவின் நட்புக்காக ரெட் ஜெயின்ட் இந்த படத்தில் இணைந்தது. அவர் கூறிய வார்த்தைகளின் படி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வெந்து தணிந்தது காடு பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்.” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Also Read | பவர் பாண்டிக்கு பிறகு.. தனுஷ் இயக்கும் படம்.. ஷூட்டிங் அப்டேட்டுடன் வெளியான தகவல்!!

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi about Simbu Vendhu Thanindhathu Kaadu 50th day

People looking for online information on Simbu, Udhayanidhi Stalin, Vendhu Thanindhathu Kaadu, Vendhu Thanindhathu Kaadu 50th day will find this news story useful.