“அப்டேட் கேட்டே இருக்கீங்க..” - Fans-க்கு சிம்பு வெச்ச கோரிக்கை.. அதுக்கு காரணம் இவர்தானா?
முகப்பு > சினிமா செய்திகள்Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
Also Read | VTK : "சிம்புவ திட்டுங்கனு அவர் அம்மா கேட்டுக்கிட்டாங்க.. ஆனா.." - ராதிகா உருக்கம்.!
50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இதில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி.” என பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், “வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததற்கு இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள் தான் காரணம், அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தை முதலில் நான் தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக்கொண்டதால் சிம்புவின் நட்புக்காக ரெட் ஜெயின்ட் இந்த படத்தில் இணைந்தது. அவர் கூறிய வார்த்தைகளின் படி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வெந்து தணிந்தது காடு பாகம் இரண்டிற்காக நான் ஆவலாக இருக்கிறேன்.” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது, “இந்த படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிப்பதற்காக தான் இந்த விழா. ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வாங்கியவுடன் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்பு தான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என பேசினார்.
நடிகர் சிலம்பரசன் பேசும்போது , “இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதி அண்ணா அவர்களுக்கு நன்றி. கண்டிப்பா உனக்காக நான் பண்றேன் என்று சொன்னார்.. அதற்காக நன்றி சொல்ல வேண்டும். கௌதம் சாருக்கும், மொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் சாருடைய இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். மல்லிப்பூ பாடலை கேட்டதுமே ரஹ்மான் சாருக்கு இந்த பாட்டு ஹிட் ஆகும் என மெயில் பண்ணிவிட்டேன்..
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது என்பது, அப்பாவின் சிம்பு சினி ஆர்ட்ஸில் பணிபுரிவதுபோலவே, சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது. ரொம்ப நன்றி அண்ணா.. மக்களுக்கு இந்த மாதிரி படம் புரியுமா என பேசிக்கொள்வார்கள். ஆனால் இது பொற்காலம் என சொல்ல வேண்டும். விக்ரம், கன்னடாவில் காந்தாரா, தமிழில் வெளியான லவ் டுடே, என எல்லா இயக்குநர்களின் கனவும் நிறைவேற்றும் ஒரு காலகட்டமாக இதை பார்க்கிறேன். மக்கள் விதவிதமான படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த படத்திலும் முத்துவாக தெரிய வேண்டும் என மெனக்கெட்டிருந்தேன். அதெல்லாம் பயமாக இருந்தது. ஒரு ராவான படமாக அமைந்தது. ஆனால் அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நன்றி.” என கூறிவிட்டு நகர்ந்தார்.
பின்னர் மீண்டும் மைக்கை நோக்கி வந்த சிம்பு, “இன்னொரு விசயம் மறந்துவிட்டேன். ரசிகர்களுக்கு ஒரு விசயம் சொல்ல வேண்டும்.. படம் பண்ணும்போது நிறைய அப்டேட்ஸ் கேட்கிறீர்கள். உங்கள் ஆர்வம் புரிகிறது. ஒரு படத்துக்காக இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவருமே நிறைய பணிபுரிகிறார்கள். ஆனால் நீங்கள் நிறைய அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் அவசரப்படுத்தினால், ஒரு தவறான முடிவை எடுத்துவிட வாய்ப்புள்ளது. எனவே நல்ல படங்களை கொடுக்க நீங்கள் எங்களுக்கு அந்த ஸ்பேஸை கொடுங்கள். இதை என் பத்து தல படத்து இயக்குநர் சொல்ல சொன்னார்.
அத்துடன் என் படத்துக்கும் மட்டுமல்ல, எல்லா படத்துக்குமே ரொம்ப தொந்தரவு கொடுக்காதீங்க.. ரசிகர்கள் நடிகரை மேலே தூக்கி வைப்பார்கள். நான் என் ரசிகர்களை மேலே தூக்கி வைக்க நினைக்கிறேன். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன், நன்றி.” என பேசினார்.
Also Read | Vendhu Thanindhathu Kaadu: மைக் ஆன்ல இருப்பதை மறந்து சிம்புவிடம் புலம்பிய ராதிகா.. GVM அல்டிமேட் Thuglife.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Simbu Mother Request To Radhika Vendhu Thanindhathu Kaadu 50th Day
- Radhika Forgot To Off Mic GVM Thuglife VTK Simbu
- Silambarasan TR Talked About Love Today Golden Age Of Kollywood
- Janani Advice Aysha To Comeback Stronger In Biggboss House
- Gautam Karthik With Silambarasan TR Pathu Thala Movie BTS
- Siva Karthikeyan Prince Streaming On November 25th On Hotstar Sources
- Varisu Germany Austria Release By Tamil De Filmverleih Official
- Superstar Rajinikanth Constructed Statue Of His Parents
- Vijay Varisu Europe Theatrical Rights Bagged By Famous Distributor
- SivaKarthikeyan Prince Movie OTT Digital Streaming Rights
- Manikandan Reveals Actress Sophia Struggle Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Myna Nandhini Struggling In Acting Life
தொடர்புடைய இணைப்புகள்
- 'Love Today படத்தை பாராட்டி தள்ளிய சிம்பு'.. ரசிகர்களுக்கு திடீர் வேண்டுகோள்..! | Simbu | VTK
- ரசிச்சு ரசிச்சு Mallipoo பாடிய Seeman🔥"STR - Seeman படம் கதை.."😍மிரட்டல் Story Revealed🤩 Ep-4
- "എൻ്റെ ജീവിതത്തിൽ ഞാൻ കണ്ടിട്ടുള്ള സ്ത്രീകൾ തന്നെയാണ് എൻ്റെ നായികമാർ !!" 😍❤️ | GVM
- Mallipoo TSK Version🔥🤣 Thalapathy Voice-ல் Punch அடிச்சு அனல் பறக்க விட்ட TSK 💥Nagaichuvai Mandram🤩
- SIMBU-க்கு SUPPORT பண்ணாதன்னு பல Directors சொன்னாங்க...COOL SURESH VTK 25th Day Celebration
- "Mallipoo பாட்டு மனச மயக்குது"... சொக்கிப்போன Seeman ❤️ STR, AR Rahman, Gautham Menon, Thamarai 🔥VTK
- இது தான் GVM-ஓட 5 Best Scenes? Amateur-அ எடுத்த Scene அது 😱 Gautham Transparent To His Fans
- STR Voice-ல Loves பண்ண KPY Azhar💖"இவ உனக்கு பொண்டாட்டியா?"😲Shock ஆன Sivaangi😲 கடுப்பான Grace🤬
- Wow! என்னா Dialogue Delivery 🔥 GVM, Daniel Recreates Best Scene From Vettaiyadu Vilayadu
- காணாமல் போன Cool Suresh தந்தை Hospital-ல் அனுமதி... Shocking CCTV Video
- 💥SHOCK ஆகிட்டேன் அத பாத்துட்டு - GVM & Dr.Ishari Ganesh
- SIMBU-னா சும்மா கிடையாது, இதான் MUTHU ஓட கெத்து - GVM