www.garudabazaar.com

நெஞ்சுக்கு நீதி படத்திற்காக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்! வெளியான வேறமாரியான புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”.

Udhaya Nidhi Stalin Nenjuku Needhi Dubbing Started

இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த,  மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான 'ஆர்டிகள் 15' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.

Udhaya Nidhi Stalin Nenjuku Needhi Dubbing Started

Udhaya Nidhi Stalin Nenjuku Needhi Dubbing Started

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம்  வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம்  ஸ்டண்ட், C H பாலு  ஸ்டில்ஸ், யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ், தமிழரசன் பச்சமுத்து  வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன்  ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Udhaya Nidhi Stalin Nenjuku Needhi Dubbing Started

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.  இந்த படத்தின் ஆடியோ லேபிளை Zee Music South வெளியிடுகிறது. தயாரிப்பு நிர்வாகி S.P. சொக்கலிங்கம், காஸ்ட்யூமர் K.செல்வம், ஹேர் மற்றும் மேக்கப் சக்திவேல், விளம்பர வடிவமைப்புகள் கோபி பிரசன்னா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

Udhaya Nidhi Stalin Nenjuku Needhi Dubbing Started

இசை - திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன்

படத்தொகுப்பு - ரூபன்

கலை - வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா

சண்டைப்பயிற்சி - Stunner சாம்

 

தொடர்புடைய இணைப்புகள்

Udhaya Nidhi Stalin Nenjuku Needhi Dubbing Started

People looking for online information on Arunraja Kamaraja, உதயநிதி ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி, Bayview, Boney kapoor, Romeo Pictures, Stalin, Udhayanidhi, Udhayanidhistalin, Zee Studio will find this news story useful.