COVID VACCINE சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு..! பிரபல நடிகரின் வேண்டுகோள் கடிதம்!
முகப்பு > சினிமா செய்திகள்திரையரங்குகளுக்குள் ரசிகர்கள் வந்து படம் பார்க்க கொரோணா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதனை தொடர்ந்து நடிகர் உதயாவும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் " மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு,:
அன்பு வணக்கம்.
பதவி ஏற்ற நாள் முதல் பம்பரமாக சுற்றி சுழன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் உழைப்புக்கு உதாரணமாகவும் விளங்கி வருகிறீர்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் அற்புதமான நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களை நேற்று முதல் திரையரங்குகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன். இதனால் பல திரையரங்குகளில் பார்வையாளர்களே இல்லை எனலாம். கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமாரப் பாராட்டுகிறோம்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள் திரையரங்குகள் மற்றும் மால்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை போதுமான அளவில் மக்களிடம் ஏற்படுத்த சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால், இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக புதிய திரைப்படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து திரையுலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இதனால் மீண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவை ஒழிப்பதற்கான தங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்க திரையுலகம் உள்ளிட்ட அனைவரும் உறுதி கூறுகிறோம்.மிக்க நன்றி, பணிவன்புடன், நடிகர் உதயா என குறிப்பிட்டுள்ளார்.
இச்சூழ்நிலையில் சிம்பு நடிப்பில் மாநாடு படம் வரும் நவ-25ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே போல் சசிக்குமார் நடிப்பில் ராஜவம்சம் நவம்பர்-26 ஆம் நாள் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Boney Kapoor And Udhayanidhi Stalin Meet Together
- UDHAYANIDHI STALIN IN BONEY KAPOOR ARTICLE 15 REMAKE TITLE
- Udhayanidhi Stalin's NEXT With This Bigg Boss Tamil Actor Gets A Powerful TITLE; Viral Video Ft Nenjuku Needhi, Boney Kapoor
- Vadivelu And Udhayanidhi Meets Viral Photos வடிவேலு, உதயநிதி
- Udhayanidhi Stalin Protest Gas Petrol Diesel Hike Viral Video
- Is Udhayanidhi Stalin Taking This GIANT Leap For Superstar Rajinikanth's Annaatthe? Know Here Ft Red Giant Movies
- Arya And Raashi Khanna's Aranmanai 3 Officially Locks A Release Date Ft Sundar C, Udhayanidhi Stalin Oct 14
- Actor Udhaya Nidhi Stalin Article 15 Remake Update
- Breaking: Udhayanidhi Stalin's Article 15 Remake Has This Magical Combo Reuniting Again
- Actor Politician Udhayanidhi Stalin Nick Name Makkal Anban
- Tiktok Sumathi Couldnt Forget Udhaya Emotional Decision Video
- Breaking Update From Udhayanidhi Stalin’s Next With Magizh Thirumeni Revealed
தொடர்புடைய இணைப்புகள்
- 'பேச்சில் கலைஞரை மிஞ்சிய சிறுவன்.. கட்டியணைத்து கொண்டாடிய ஸ்டாலின்..! நெகிழ்ச்சி தருணம்
- Stalin சொன்ன 7 Points.. நம்பரில் உள்ள CSK அரசியல்..! Dhoni மேடையில் ரகசியம் உடைத்த CM
- சிங்கபெண் ராஜேஸ்வரிக்கு Salute.. சிங்கம் பட பாணியில் பாராட்டிய முதல்வர்..!
- 'டீக்கடையில் 'முதல்வரிடம் கேள்வி கேட்ட சிறுவன்'...சுவாரஸ்யமான சம்பவம் | CM Stalin
- "எந்த தப்பும் பண்ணல, அரசியலுக்காக அவதூறு பரப்புறாங்க"..! - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டி
- 'கொடுக்குற சாப்பாடு நல்லாருக்கா' Sudden-அ Taste செய்த ஸ்டாலின்! வியந்து பார்த்த மக்கள் |Chennai Rain
- 'வேட்டியை மடித்து கட்டி களம் புகுந்த அமைச்சர்கள்' சூழன்று சூழன்று மக்கள் பணி..!
- ஸ்டாலினுடன் கைகோர்த்த இறையன்பு.. அடுத்தடுத்து உடனடி ACTION..! களத்தில் நேரடி ஆய்வு
- வெள்ளத்தில் மூழ்கிய சென்னை..உடனடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின் | Chennai Heavy Rain | MK Stalin
- "ஐயா எல்லாம் உங்களால தான்.. பட்டா, ரேஷன், ஆதார்லாம் வந்திருக்கு" -கண்ணீர் மல்க நன்றி சொன்ன மக்கள்
- உயிரிழந்த பெண் போலீஸ்.. உடனே சென்ற CM..! நேரில் சென்று கண்ணீர்..
- சென்னை மக்களின் எதிர்பார்ப்பு..வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்