www.garudabazaar.com

உலக அளவில் நேசிக்கப்படும் தல! அஜித்தை புகழ்ந்த போனிகபூர்! வைரலாகும் LATEST புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Nothing can stop Boney Kapoor about Thala Ajith

அதனைத்தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது.

Nothing can stop Boney Kapoor about Thala Ajith

இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தல அஜித் தற்போது வட இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தல அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

Nothing can stop Boney Kapoor about Thala Ajith

மேலும் தல அஜித் தனது குடும்பத்துடன் ஜெய்பூரில் நாட்களை செலவிட்டார். அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதனைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் தல அஜித் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாபின் வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் (Border Security Force) எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின.

Nothing can stop Boney Kapoor about Thala Ajith

இந்நிலையில் போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் இட்டுள்ளார். அதில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து, அஜித்குமார் தனது பிடித்த வாழ்க்கையை வாழ்வதிலிருந்தும், அவரது ஒவ்வொரு கனவும் நனவாகுவதை இவ்வுலகில் எதுவுமே தடுக்க முடியாது - உலக அளவில் நேசிக்கப்படும் அஜித்குமார் - என்று போனிகபூர் டிவீட் செய்துள்ளார். 

Nothing can stop Boney Kapoor about Thala Ajith

Nothing can stop Boney Kapoor about Thala Ajith

இந்த டிவீட்டும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nothing can stop Boney Kapoor about Thala Ajith

People looking for online information on Ajith Kumar, அஜித் குமார், தல, தல அஜித், வலிமை, Boney kapoor, Thala, Valimai will find this news story useful.