www.garudabazaar.com

"South India-ல இருந்து அவர்தான் வேணும்னு..".. ரஜினி நடித்த ஹாலிவுட் படத்தின் தயாரிப்பாளர் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் தமது 9 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்காக விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகள் உட்பட பல இண்டர்நேஷனல் டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Hollywood Movie Tamil Producer Ashok Amirtaraj Interview

இவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் பிரபலமான டென்னிஸ் வீரர்கள் ஆவர். பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கிய அஷோக் அமிர்தராஜ், இவர் புகழ்பெற்ற Ghost Rider: Spirit of Vengeance (2012), Walking Tall , Night Eyes மற்றும் ரஜினி நடித்த ஹாலிவுட் படமான Bloodstone, (ஷங்கர் இயக்கிய) ஜீன்ஸ் ஆகிய  100க்கும் அதிகமான படங்களைத் தயாரித்துள்ளார். 

Hollywood Movie Tamil Producer Ashok Amirtaraj Interview

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேக பேட்டி அளித்துள்ள தயாரிப்பாளர் அஷோக் அமிர்தராஜ், “என்னைப் பொறுத்தவரை ஹாலிவுட் மற்றும் இந்திய திரைத்துறையை கனெக்ட் செய்ய நான் முயற்சித்தேன். அதிலும் நான் ரஜினியுடன் இணைந்து பணிபுரிந்த திரைப்படம் பிளட் ஸ்டோன். அந்த திரைப்படத்தில் பணிபுரியும் பொழுது இன்னும் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அறிவதற்கான வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் அவர் அருமையானவர். லதா ரஜினிகாந்த் மற்றும் ரஜினி குடும்பத்தினர் அனைவரும் அருமையானவர்கள்.

Hollywood Movie Tamil Producer Ashok Amirtaraj Interview

இந்த திரைப்படம் பண்ணுவதற்காக அவர் என்னுடன் சில வாரங்கள் தங்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்காக ஒரு மிகப்பெரிய ஸ்டார் வேண்டும் என்று நான் நினைத்தபோது தென்னிந்தியாவிலிருந்து ரஜினியை கட்டாயம் இதில் இடம்பெற செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அவருடைய ஸ்டைல் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் முக்கியமான காரணம்” என தெரிவித்துள்ளார்.

"SOUTH INDIA-ல இருந்து அவர்தான் வேணும்னு..".. ரஜினி நடித்த ஹாலிவுட் படத்தின் தயாரிப்பாளர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hollywood Movie Tamil Producer Ashok Amirtaraj Interview

People looking for online information on Ashok Amirtraj, Blood Stone, Hollywood Movies, Rajinikanth will find this news story useful.