மொட்டை ராஜேந்திரன் சோலோ ஹீரோவாக கலக்கும் ‘ராபின்ஹுட்’ படத்தின் மோஷன் போஸ்டர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்1992ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் படத்தில் ஒரு சின்ன அடியாள் வேடத்தில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களில் அடியாளாகவே நடித்து வந்த அவருக்கு பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தில் வரும் ஜெயில் வார்டன் கதாப்பாத்திரம் கவனம் பெற்றுத் தந்தது.

2009ம் ஆண்டு மீண்டும் பாலா இயக்கத்தில் வெளியான ’நான் கடவுள்’ படத்தில் அவர் நடித்த கொடூரமான வில்லன் கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் அவர் இமேஜையே முற்றிலுமாக மாற்றியது.
இதில் இருந்து காமெடி வேடங்களில் நடிக்கத்தொடங்கிய அவருக்கு 'ராஜா ராணி', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'ஹரஹர மகாதேவகி' ஆகிய படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இதைத் தொடர்ந்து ’ராபின்ஹுட்’ படம் மூலம் தற்போது சோலோ ஹீரோ அவதாரம் எடுத்துள்ள மொட்டை ராஜேந்திரன். இந்த படத்தை லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் பழனியப்பன் எழுதி இயக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீநாத் இசையமைக்கிறான். இந்த படத்தின் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
Congrats team ☺️
Here it is #RobinhoodMotionPoster
👉 https://t.co/8sN5ri5pQ7#MottaRajendran @Karthik5572136 @VsrinathVijay @LumieresStudios @LahariMusic @Pro_Bhuvan
— VijaySethupathi (@VijaySethuOffl) January 27, 2020
மொட்டை ராஜேந்திரன் சோலோ ஹீரோவாக கலக்கும் ‘ராபின்ஹுட்’ படத்தின் மோஷன் போஸ்டர் இதோ! வீடியோ