Anjali : “நான் அப்படி நெனைக்கல.. என் Goal அது இல்ல..!”.. பேட்டியில் கண்கலங்கிய நடிகை அஞ்சலி..! Exclusive
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அஞ்சலி நடிப்பிலான ‘ஃபால்’(Fall) எனும் வெப் தொடரை ஒளிபரப்பவுள்ளது. நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்” வெப் சீரிஸ், "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இந்த சீரிஸை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.
Also Read | "அவரு தான் காதல் பிசாசு.. பொண்ணு லவ் பண்ணல, அப்பாவுக்கு லவ் வந்துருச்சு 😅".. குயின்சி Exclusive!!
இந்த வெப் சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில், இந்த வெப் சீரிஸ் குறித்து பேசிய நடிகை அஞ்சலியிடம், “அஞ்சலியை யார் தள்ளிவிட்டார்?” என்று கேட்கப்பட்டபோது, “அதை மட்டும் இப்போது சொல்ல முடியாது” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்ல தொடங்கினார்.
அதன்படி இப்படம் குறித்து பேசிய நடிகை அஞ்சலி, “ஃபால் திரைப்படம் ஒரு சுவாரசியமான திரைப்படமாக இருந்தது. இதில் என்னுடைய சப்ஜெக்ட் மிகவும் சுவாரசியமானது. நான் அப்படித்தான் அதை தேர்வு செய்கிறேன். அதற்கு தகுந்தாற்போல் ஃபால் அமைந்தது. இதில் என்னை யாரோ தள்ளி விடுகிறார்கள். அவர் யார் என்று தெரியவில்லை. நான் கோமாவுக்கு போகிறேன், டிரெய்லர் வரக்கூடிய, நான் விழக்கூடிய அந்த போர்ஷன் இன்னும் சுவாரசியமாக இருக்கும். அதிலும் அதையே டைட்டிலாக ஃபால் என வைத்து விட்டார்கள். இது மிகவும் நன்றாக இருக்கிறது என்று இயக்குனரிடம் நான் குறிப்பிட்டேன். அதுதான் அதில் கூடுதல் சுவாரசியம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் “அஞ்சலியை பொறுத்தவரை அஞ்சலி நடித்த ஆனந்தி, மணிமேகலை, லீனா, விஜி, ஜோதி என கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையாக பேசப்படுகிறது. இவ்வளவு பெஸ்ட் முனைப்பை கொடுத்தும் அஞ்சலி அண்டர் ரேட்டடு என்று சொல்லப்படுகிறாரா? நீங்கள் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அஞ்சலி, “நான் அப்படி பார்க்கவில்லை. எல்லாரும் ஒரே மைண்ட் செட்டில் இருப்பதில்லை. இருக்க வேண்டும் என்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதையை தேர்வு செய்ய உரிமை உள்ளது. எனக்கு இலக்கு வேறு. எனது இலக்கு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது வேறு. நான் எனக்கு வருவதில் சிறந்த கதாபாத்திரங்கள், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்கிறேன். தேர்வு செய்ய விரும்புகிறேன். நான்கைந்து திரைப்படங்களில் நடிப்பதை விட ஒரு திரைப்படம் நடித்தாலும் அதில் என்னுடைய கதாபாத்திரம் ஆழமாகவும் பலமாகவும் ரிஜிஸ்டர் ஆகும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார். இவ்வாறு பேசும்போது நடிகை அஞ்சலி கண்கலங்கி எமோஷனலாக பேசினார்.
அஞ்சலி பேசும் முழுமையான பேட்டியை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.
Also Read | 'வரலாறு முக்கியம்' படத்துல லேடி கெட்டப்பில் நடிகர் ஜீவா ..? வைரல் ஃபோட்டோ..! Varalaru Mukkiyam
ANJALI : “நான் அப்படி நெனைக்கல.. என் GOAL அது இல்ல..!”.. பேட்டியில் கண்கலங்கிய நடிகை அஞ்சலி..! EXCLUSIVE வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Queency About Azeem And Title Winner Names Exclusive
- Queency About Bigg Boss Contestants Inside House Exclusive
- Queency About Kathir And Shivin Inside Bigg Boss House Exclusive
- Shaam About H Vinoth Phone Call After Varisu Shooting Exclusive
- Robert Master About Azeem In Bigg Boss House Exclusive
- Robert Master About Rachitha And His Girlfriend Exclusive
- Mysskin Explains About Bar Songs In His Films Exclusive
- Mysskin Told Action Story To Simbu Exclusive Behindwoods
- Mysskin About Directing Thalapathy Vijay Exclusive
- Rajinikanth Character In Baba Suresh Krishna Exclusive
- Ajith Kumar AK Director Siva Video Call Exclusive
- Vishnu Vishal About His Controversial Picture Exclusive
தொடர்புடைய இணைப்புகள்
- മാട്രിമോണിയൽ പരസ്യങ്ങളിൽ SC/ST ഒഴികെ എന്ന വാചകം എഴുതുന്ന തരത്തിൽ പ്രാകൃത മനുഷ്യർ താമസിക്കുന്ന
- കഴിഞ്ഞ 3 വർഷത്തിനിടെ മൂന്ന് ജാതി കൊലകളാണ് നടന്നത്- സണ്ണി എം കപിക്കാട്
- സംവരണം നിർത്തലാക്കിയാൽ ജാതി ഇല്ലാതാകും എന്ന് പറയുന്നവർ ജന്മനാ മദ്ധബുദ്ധികളായിരിക്കും -
- കേരളത്തിൽ ഇന്നുവരെ റിസർവേഷൻ കാറ്റഗറിയിൽ നിന്ന് ഒരു വി സി ഉണ്ടായിട്ടില്ല
- 1948 സംവരണം നടപ്പിലാക്കുമ്പോൾ സവർണ്ണർക്കിടയിൽ ഇതിലും ദരിദ്രർ ഉണ്ടാടായിരുന്നു
- 1948-ൽ ഇതിനേക്കാൾ ദരിദ്രർ സവർണ്ണർക്കിടയിൽ ഉണ്ടായിരുന്നു എന്നതാണ് യാഥാർഥ്യം | SUNNY M. KAPICADU
- അമ്മയും മകളും ചേര്ന്നാണ് മകനെ വകവരുത്തിയത്
- എന്താണ് കൊടുത്തതെന്ന് ഗ്രീഷ്മയോട് ചോദിച്ചു, മറുപടിയായി തന്നത് കഷായത്തിന്റെ ഗൂഗിള്
- പോലീസ് വന്നാല് എന്ത് പറയണമെന്ന് അമ്മയ്ക്കും മാമനും വരെ ഗ്രീഷ്മ ക്ലാസ് കൊടുത്തിരുന്നു!
- പോലീസ് അന്വേഷണത്തില് വിശ്വാസമുണ്ടായിരുന്നില്ലെന്ന് ഷാരോണിന്റെ പിതാവ്. പിന്നീട്
- ഗ്രീഷ്മ, ചേട്ടൻ ICU - ൽ കിടന്നിട്ട് പോലും വിളിക്കാതെ ഇരുന്നതിൽ എനിക്ക് സംശയം തോന്നി | Sharon Case |
- കണ്മുന്നിൽ ഒരു കുട്ടി മരിച്ചു..തുടർന്ന് 18 വർഷമായി ട്രാഫിക് വാർഡൻ !! ❤️👏🏼 | Inspiring Persons