www.garudabazaar.com

தல படத்துக்காக ‘லுக்கை’ மாற்றியது பற்றி மனம் திறந்த இயக்குநர் - நடிகர்! வைரல் போஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த தற்போதைய லாக்டவுனில் பலர் தங்கள் நேரத்தை தங்கள் குடும்பத்தினருடனும் நெருங்கியவர்களுடனும் செலவிடுவது மட்டுமல்லாமல், தங்களது அதிகமாகும் உடல் எடையை அதாவது உடலில் கிலோ கணக்கில் சேரும் எடையை குறைத்தும் வருகின்றனர்.

transformation From Depression says ajith movie actor director

இதன் மூலம் தங்களை மீண்டும் புதிதாக பெற முயற்சிக்கின்றனர். இதனிடையே பிரபல நடிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்துக்காக தனது உடல் எடை டிரான்ஸ்ஃபர்மேஷன் நடந்தது பற்றி பகிர்ந்துள்ளார்.பிரபல நடிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் ஜி.வி.பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிப்பிலும் அறிமுகமானார். பின்னர் சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படட்தை இயக்கியிருந்தார்.

transformation From Depression says ajith movie actor director

பின்னர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் உருவான  நேர்கொண்ட பார்வை படத்திலும், படம் முழுவதும் ட்ராவல் ஆகும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இது இந்தி திரைப்படமான பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் படம். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நண்பர் கதாபாத்திரத்தில் தான் ஆதிக் இந்த படத்தில் நடித்தார். இந்நிலையில் தான் ​​அவர் தனது சமூக ஊடகத்தில் இரண்டு வெவ்வேறு படங்களைப் பகிர்ந்து, “டிப்ரஸனுடன் இருந்த காலத்திலிருந்து #NerkondaPaarvai பட லுக் டெஸ்ட் வரை ஒரு டிரான்ஸ்ஃபார்மேஷன். தன்னம்பிக்கை தான் திறவுகோல்.” என பதிவிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். எனினும் படப்பணிகள் நிறைவடைந்தாலும், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் உள்ளிட்ட அப்டேட்கள் கொரோனா சூழல் குறைந்ததும் வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ALSO READ: "சமந்தாவா இது? ரியல் ஃபைட் மூவ்..!".. தெறிக்கவிடும் தி பேமிலி மேன் 2 ஷூட்டிங் காட்சி!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

transformation From Depression says ajith movie actor director

People looking for online information on Aadhik Ravichandran, Ajith Kumar, Anbanavan Asarathavan Adangathavan, Nerkonda Paarvai, Trisha Illana Nayanthara will find this news story useful.