Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

OTT-யில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!.. Week End- அ என்ஜாய் பன்னுங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா: கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

this week end OTT release tamil telugu hindi malayalam movies

ஆஹா.. இதை பார்த்தா சிம்பு ரசிகர்கள் மெர்சலாயிடுவாங்க! வைரலாகும் மாஸ் ஸ்டில்

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

this week end OTT release tamil telugu hindi malayalam movies

Gehraiyaan (2022)

இந்த படம் திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்துவிட்டு OTT வழியைத் தேர்வுசெய்து, நேராக Amazon Prime -ல் ரிலீசாக உள்ளது.  இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வா, நசீருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக பிப்ரவரி 11 ஆம் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்பு கெஹ்ரையன், ஷகுன் பத்ரா இயக்கத்தில், கரண் ஜோஹரின் தயாரிப்பில், 25 ஜனவரி 2022 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

this week end OTT release tamil telugu hindi malayalam movies

ஆகாஷ் வாணி (2022)

கவின், ரீபா மோனிகா நடிப்பில் ஆஹா ஒடிடியில் வெப் சீரிஸாக வெளியாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வழக்கமான பூஜை விழாவுடன் ஆகாஷ்வானி  வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த வெப் சீரிஸின் முன்னோட்டம், போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

this week end OTT release tamil telugu hindi malayalam movies

Writer (2021)

இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 24ல் இந்த படம் தியேட்டரில் ரிலீசானது. தற்போது OTT ரிலீசாக ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது.

ஆனந்தம் விளையாடும் வீடு (2021)

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடித்த “ஆனந்தம் விளையாடும் வீடு”  படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஷிவத்மிகா  ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன்,  சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 24ல் இந்த படம் தியேட்டரில் ரிலீசானது. தற்போது OTT ரிலீசாக Zee5 தளத்தில் வெளியாகிறது.

Good Luck Sahi (2022)

கோவிட்-19 தொற்று காரணமாக பலமுறை தாமதமாகி, குட் லக் சகி 28 ஜனவரி 2022 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களுக்கு பிறகு இந்த படம் அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகிறது. நாகேஷ் குக்குனூர் எழுதி இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஆதி பினிசெட்டி, ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

this week end OTT release tamil telugu hindi malayalam movies

இந்த படங்கள் போக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஹீரோ (தெலுங்கு) படமும், ஜி5 ஒடிடியில் மல்லி மோதிலாயிண்டி (தெலுங்கு) படமும், ஆஹா ஒடிடியில் பாமா கலபம் தெலுங்கு படமும், சோனி லைவ் ஓடிடியில் Freedom Fight (மலையாளம்) படமும், நெட்பிளிக்ஸில் Once Upon a Time in Hollywood படமும் வெளியாக உள்ளது.

வீடு தேடி வந்து வலிமை விநியோகஸ்தர் சொன்ன நல்ல விஷயம்.. பூரித்துப் போய் வரவேற்ற போனி கபூர்

this week end OTT release tamil telugu hindi malayalam movies

People looking for online information on இந்திய படங்கள், ஓடிடி, OTT Release, South Indian movies will find this news story useful.