www.garudabazaar.com

Video: முன் 'ஜாக்கிரதை'க்கு ஒரு அளவே இல்லையா?... ரம்யாவை பார்த்து 'சிரிக்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பாலாஜிக்கு எதிராக சனம் பேசும்போதே நாளைக்கு நிச்சயம் தரமான சம்பவம் இருக்கு என ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறி விட்டது. இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் சனம் ஷெட்டியுடன் பாலாஜி கடுமையாக சண்டை போடுகிறார்.

'This is too Funny' Fans trolled Ramya, video goes viral

விளையாட்டாக சனம் அவரை உதைக்க நீ எப்படி என்னை உதைக்கலாம்? என பாலாஜி சீற, பதிலுக்கு சனம் நீ வேணும்னா என்ன உதைச்சுக்கோ? என்று கூறுகிறார். இந்த சண்டையின்போது பாலாஜி கரண்டியுடன் அவரை நோக்கி செல்ல, அப்போது ரம்யா சட்டென அவரின் கையில் இருந்த கரண்டியை பிடுங்குகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த சீனை மட்டும் தனியே கட் செய்து அவரே வெப்பன்ஸ் எடுத்துட்டு சண்டைக்கு போறாரு நீங்க ஏன் அதை பறிச்சிட்டீங்க? என கிண்டலடித்து வருகின்றனர். வேறு சிலரோ உங்க முன் ஜாக்கிரதைக்கு ஒரு அளவே இல்லையா ரம்யா? என கலாய்த்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

'This is too Funny' Fans trolled Ramya, video goes viral

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.