Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

இந்த வாரம் எலிமினேஷன் சுற்றுக்கு சென்ற போட்டியாளர்.. எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

this famous contestant in elimination round எலிமினேஷன் சுற்றுக்கு சென்ற போட்டியாளர்

இந்நிலையில் கடந்த வாரம் கோமாளிகள் பேய் மற்றும் அமானுஷ்யம் சம்பந்தமான வேடங்களில் வந்து கலக்கினார். கடந்த வாரங்களைப் போலவே சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான புரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் ஆர்வமாக வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் எலிமினேஷன் சுற்றுக்கு அஸ்வின் மற்றும் பவித்ரா இருவரும் சென்றிருக்கின்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் ஆரம்பம் முதலே அஸ்வின் மிகவும் நம்பிக்கை மிகுந்த போட்டியாளராக இருந்து வந்துள்ளார். அவர் மீது ரசிகர்கள் இறுதிப்போட்டிக்கு வரை செல்வார் என்று நம்பிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அஸ்வின் எலிமினேஷன் சுற்றுக்கு சென்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது/  இருவரும் சிறப்பாக கொடுக்கப்பட்ட டாஸ்கை செய்ய, என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த வாரம் எலிமினேஷன் சுற்றுக்கு சென்ற போட்டியாளர்.. எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

this famous contestant in elimination round எலிமினேஷன் சுற்றுக்கு சென்ற போட்டியாளர்

People looking for online information on Ashwin, Pavithra will find this news story useful.