Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

VIDEO: அட.. குழந்தையாவே மாறிடுச்சுயா இந்த பொண்ணு.. நடந்த சம்பவத்த நீங்களே பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகராக விஜய் டிவிக்கு வந்தாலும், தன்னுடைய மிடுக்குத் தனத்தாலும் சுட்டித் தனத்தாலும் புகழ்பெற்றவர் சிவாங்கி. தற்போது குக் வித் கோமாளியில் சிவாங்கி, அஸ்வினுடன் இணைந்து சமைக்கும் புதிய புரோமோ விஜய் டிவியில் வெளியாகியுள்ளது.

Sivaangi Ashwin trampoline cook with comali Promo சிவாங்கி

இதில் சமைக்கும்போது இடையில் trampoline-ல் குதிக்க வேண்டிய டாஸ்க் இருந்தது. ஆனால் அஸ்வினின் சமையலுக்கு அந்த பக்கம் சண்டை போட்டுக்கொண்டே வந்த மணிமேகலையும் புகழும் இடையூறு செய்ய, தான் இன்னும் சமையலே ஆரம்பிக்கலயே என்று புலம்புகிறார் அஸ்வின். அப்போது அஸ்வினிடம், “பரவால்ல.. நீங்க குதிங்க நான் பாத்துக்கிறேன்” என்று அனுப்பி வைக்கிறார் சிவாங்கி.

பின்னர் சமைத்துக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு அஸ்வின் அங்கிருக்கும் குட்டி trampoline-ல் சென்று குதிக்கிறார். அதைப் பார்த்ததும் சிறு குழந்தையாகவே மாறி, அந்த trampoline-ல் குதித்து விளையாடும் தனது ஆசையை அடக்க முடியாத சிவாங்கி, அஸ்வினேய்.. என கத்திக்கொண்டே ஓடிச்சென்று தானும் குதித்து மகிழ்ந்து விளையாடுகிறார்.

பின்னணியில் எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பதையும் கேட்க முடிகிறது. எனினும் “நீ இங்க வந்துட்டா.. யாரு அங்க சமைப்பாங்க?” என அஸ்வின் கேட்கிறார். ஆனாலும்  “பரவால்ல” என தன் சந்தோஷத்தை காம்பரமைஸ் செய்யாத சிவாங்கியின் செயலுக்கு பலரும் லைக்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வாரம் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் பிரபல தமிழ், ஹாலிவுட் பேய் பட வேடங்களில் வருகின்றனர். வெள்ளித்திரையிலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ள சிவாங்கி சிவகார்த்திகேயனுடம் டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ALSO READ: "புகழ் மட்டும் கார் வாங்கிட்டாரு.. ஆனா".. ஃபீல் பண்ணிய பாலா ரசிகர்.. புகழின் நெகிழ வைத்த பதில்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi Ashwin trampoline cook with comali Promo சிவாங்கி

People looking for online information on Ashwin, CookWithComali, Sivaangi, VijayTelevision will find this news story useful.